📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience : 128📜
👨‍🎤 Arun Prakash
⏳ 1 month ago

16/02/2023 12:54AM :நான் ஒரு புல் தரையில் நின்று கொண்டு இருந்தேன். அங்கே நிறைய மனிதர்கள் இருந்தார்கள். நிறைய விலங்குகள் அந்த புள்ளை மேய்ந்து கொண்டே இருந்தது . திடீரென்று அந்த விலங்குகள் ஓடத் தொடங்கியது. அந்த விலங்குகள் என்னை நோக்கி ஓடத் தொடங்கி இருக்கிறது என்று நினைத்து நானும் ஓடினேன் . பின்பு நான் ஒரு வீட்டுக்கு அருகில் நின்று கொண்டு இருந்தேன். திடீரென்று வானம் கருமை நிறமாக மாறியது. நான் திடீரென்று பூமிக்குள் செல்வது போல் இருந்தது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று சொல்லிக் கொண்டே சென்றேன். பின்பு அங்கே இருந்த கட்டிடங்கள் உடையும் சத்தம் கேட்டது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 month ago

07/02/2023 - பட்டினத்தார் என்னுடன் இருப்பது போல் உணர்ந்தேன் . பின்னர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவதை பற்றி அவர் ஏதோ கூறிக் கொண்டிருந்தார் .அது என்ன என்று தெரியவில்லை. ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் பாடிக்கொண்டிருந்தது . கீழே சிதம்பரம் என்ற வார்த்தை எழுதி இருந்தது. பின்பு திடீரென்று வள்ளலார் என்னுடைய காலடியில் அமர்ந்திருந்தார். திடீர் என்று எனக்கு விழிப்பு வந்தது . பின்பு விட்டத்தை பார்த்தேன் அங்கே வள்ளலாரின் உருவம் தெரிந்தது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Bharathi
⏳ 1 month ago

11/02/2023 - எனக்கு சனிக்கிழமை காலையில் ஒரு கனவு வந்தது , இயற்கை பேரழிவு வந்தது போல் இருந்தது . சுத்தியும் தண்ணீர் வந்தது. அப்போது எல்லோரும் சேர்ந்து அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று சொல்கிறோம். பின்பு அனைத்தும் சமநிலைக்கு வரப்பட்டது. பின்பு நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன் என்னை சுற்றியும் தண்ணீர் வந்தது. பின்பு நான் மறுபடியும் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்கிறேன் யாரோ பின்னாடி இருந்து வந்து என்னுடைய இரு சக்கர வாகத்தை தள்ளி விடுகிறார்கள் . வள்ளலாரா என்று தெரியவில்லை ,நான் அதிலிருந்து தப்பித்து வெளியே வந்து விடுகிறேன் .

🗺 Chennai - 👀Dream
👨‍🎤 ஜோதி மைந்தன்
⏳ 1 month, 3 weeks ago

எமது வாழ்க்கையில் உணர்வு பூர்வமாக வள்ளல் பெருமான் வழிகாட்டி வந்தாலும் நேரடி அனுபவத்தை இங்கு எடுத்து கூறுவது இந்தகட்டுரைக்கு நல்ல சாட்சியமாக அமையும் என்பதால் இரண்டு நிகழ்வு களை இங்கு சுட்டி காட்டுகிறோம். இராணிப்பேட்டையில் ஞானசபை கட்டியபோது கீழ்தளம் அமைத்து அந்த தளம் அமைக்க ஏதுவாக பீடம் சுற்றி மணல் கொட்டப்பட்டிருந்தது.24.06.1998 அன்று அந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது ,பீடத்தருகே சென்ற நல்லதொரு சமுக சேவகராக இராணிப்பேட்டையில் திகழ்ந்துவரும் கஜேந்திரன் என்ற அன்பருக்கு வள்ளல் பெருமான் சில கணங்கள் தமது ஞானதேகத்தை காட்டி மறைந்தார். அதன் காரணமாக அந்த அன்பர் ஒரு நாழிகைநேரம் உணர்ச்சி மேலிட்டில் தத்தளித்தார். நல்ல மனிதர் சேவை குணம் கொண்ட பண்பாளர் என்பதால்,எம்மைவெளிப்படுத்தினோம் என வள்ளல் பெருமான் எம்மிடம் கூறினார். அடுத்ததாக திருமாளிகை கோபுரத்தின் உச்சியில் 10.08.1999 அன்று முதல் ஜோதி ஏற்றப் பட்டது. அது சமயம் வந்திருந்த அன்பர்கள் ஜோதியை தரிசனம் செய்ய கோபுரம் மேலேயே ஏறிவந்து வணங்கிவிட்டுச் சென்றார்கள். அடுத்து இரண்டாவதுஜோதி 07.09.1999 அன்று பூசதினத்தன்று ஏற்ற முற்படும்போது வள்ளல் பெருமான் எம்மிடம், “தங்களைத் தவிர யாரும் மேலே வரவேண்டாம் என அறிவித்து விடுங்கள்,அனைவரும் கீழிருந்தே ஜோதி தரிசனம் செய்யட்டும்” என்று கூறினார். அதன்படி யாமும் அன்பர்களுக்கு,”யாரும் எம்மை பின் தொடர வேண்டாம்” என அறிவித்து விட்டு, கீழே உள்ள ஜோதியிலிருந்து கற்பூரம் ஏற்றி எடுத்துக் கொண்டு மகாமந்திரம் கூறிக்கொண்டே கோபுரத்தின் மேல் நோக்கி படியேறினோம். அதுசமயம் வெண்மையான ஆடையுடன் வெளீவாயிலிலிருந்து ஒரு மனிதர் சுமார் 5அடி இடைவெளியில் பின்தொடர்ந்தார். யாம் இதை அறிந்து,வள்ளல் பெருமான் உணர்த்தியும்,இவர் பின்தொடர்கிறாரே,இவர் வெளியிலிருந்து வருகிறார் எனவே நமது அறிவிப்பு இவருக்கு தெரிந்திருக்காது,நாம்தான் மந்திரம் கூறிகொண்டு செல்கிறோம் மற்றவர்களாவது எடுத்துக் கூறலாமே என மனதில் வருந்தி மந்திரத்தை நிறுத்தாமலேயே மேலே சென்று, படிநிலை கோபுரத்தை வலம் வந்து மெலெ சென்று தீபம் ஏற்றினோம். வந்தவர் கோபுரத்தில் ஈசான்ய மூலையில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார். யாம் தீபமேற்றி மகாமந்திரத்தை தொடர்ந்து ஜோதிப்பாடல் பாடி ஆராதனை செய்து தீபாராதனை தட்டை எடுத்து கீழிறங்கிக் கொண்டே அந்த மனிதரிடம்,”ஐயா கட்டளையை கூறியும் மேலே வந்திருக்கிறீர்களே” என்று வருத்தப்பட்டு கூறிக்கொண்டு அவரது காலிலிருந்து தொடங்கி முகத்தை பார்க்க முயற்சிக்கையில் அந்த மனிதர் மறைந்து போனார். யாம் விதிர்த்து உணர்ச்சி மேலிட்டு படிக்கட்டு இருக்கும் இடம்கூட தெரியாமல் கலங்கி, சிறிதுநேரம் அமர்ந்து ,வந்தது வள்ளல் பெருமான் என உணர்ந்து, கீழே வந்து அனைவரிடமும் கூறி ஸ்தூல தேகமே காற்றில் கரைந்ததை கூறி ஞானதேகத்தின் பெருமையை எடுத்தியம்பி அனைவரும் ஆனந்தம் அடைந்தோம். முழு ஈடுபாட்டுடன் வள்ளல் பெருமான் வழி நின்றால் கண்டிப்பாக வாழ்கின்ற வள்ளல் பெருமானை தரிசிக்கலாம் என்பது எங்களது அனுபவ உண்மை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம். (இந்த அனுபவ வெளிப்பாட்டு கட்டுரை சென்னையிலிருந்து வெளியாகும் “தீபச்சுடர்” மாத இதழில் (ஆகஸ்டு 2009) வெளியிடப்பட்டது) -வெளிப்பாடு தொடரும் என்றென்றும் சன்மார்க்க பணியில், ஜோதிமைந்தன் சோ. பழநி

🗺 ராணிப்பேட்டை - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 1 month, 3 weeks ago

30/01/2023 3:28 A.M நானும் வள்ளலாரும் தர்மச்சாலையில் நின்று கொண்டிருந்தோம்: நான் : ஏதாச்சு சூப்பர் பவர் இருந்தா குடுங்க ! வள்ளலார் : ஆமா நீயும் கேட்டுட்டே இருக்க ! பின்பு வள்ளலார் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார் நானும் அவருடன் நடந்தேன் நான் : புதுசா பாட்டு ஏதாவது எழுதி இருந்தீங்கன குடுங்க ? வள்ளலார் : ஆமா வரவேற்பு மாலை என்ற பாடலை எழுதிட்டு இருக்கேன். அதுல போகர்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் பத்தியும் எழுதி இருக்கேன். அது முடிந்து விட்டது என்றால் YouTube full uh release பண்ணிடலாம். Full uh spread Agum ! நாங்கள் இருவரும் நடந்து கொண்டிருந்த பாதையில் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் வள்ளலார் ஏதாச்சும் இருந்தா கொடு என்றார். நான் எனது பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன் வள்ளலார்: already நானும் என் அக்காவும் அந்தப் பாடல்களை YouTubeயில் ஒருவரிடம் கொடுத்தோம் .ஆனால் அது சரியாக வரவில்லை ! நான்: சாமி எப்போது ஆண்டவர் வருவாரு ? வள்ளலார்: இந்த மாசம் வருவாரு நான்: எப்ப வருவாரு ? வள்ளலார்: 1:30AM மணிக்கு சிதம்பரம்ல வருவாரு ! இதைக் கேட்டவுடன் கனவு கலைந்து எழுந்து விட்டேன்!

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 month, 3 weeks ago

29/01/2023 - என்னுடைய கனவில் ஒரு காகிதம் தோன்றியது. அதில் வள்ளலார் வர போகிற தினங்கள் இருந்தன. அதில் 4/2 என்ற ஒரு தேதி இருந்தது பின்பு ஜூன் மாதத்தில் ஒரு தேதி இருந்தது. பின்பு 1900த்தியில் கலியுகம் முடிந்து விட்டது என்று எழுதியிருந்தது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 அஜய்
⏳ 1 month, 4 weeks ago

8/01/2023 - நான் கனவில் ஒரு விழாவில் இருக்கிறேன். அங்கு சொந்தங்களை வரவேற்று கொண்டு இருந்தேன். அப்போது ஒரு வெள்ளை நிற ஆடை உடுத்திய வயது முதிர்ந்த சன்மார்க்க பெண் சித்தர் ஒருவர் என்னை நோக்கி வந்தார்...அவர் ஒளி தேகம் பெற்று இருந்தார்... நான் அவரின் தெய்வீக ஒளி தோற்றம் கண்ட ஆனந்தத்தில் இருந்தேன்.நான் அவரின் பாதத்தை தொட முயன்றேன் ஒளி தேகம் ஆதலால் முடியவில்லை. பின் அவர் பரிபாசையில் பேசினார் பின் சிரித்து கொண்டே என்னை ஆசிர்வது மறைந்துவிட்டார்.

🗺 பழனி - 👀Dream
👨‍🎤 பிரபா
⏳ 2 months, 4 weeks ago

விளக்கு ஏற்றி தியானம் செய்து கொண்டு இருந்தேன்.சிறிது நேரம் கழித்து விளக்கில் உள்ள ஜோதி சிறிது சிறிதாக மாறி கடைசியில் வள்ளலார் தோற்றமாக மாறியது.

🗺 Paramathi velur - 👀Real
👨‍🎤 I.Pratheesh
⏳ 3 months ago

December 20 2022: மீண்டும் ஒரு கனவு வந்தது ஆனால் அது வெறும் கனவல்ல...ஆண்டவர் பூமிக்கு வருவதை பற்றிய தகவல்....அதாவது எனக்கு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஆண்டவர் பூமிக்கு எந்த தேதியில் வருவார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எனவே இரண்டு நாட்களாக தூங்கச் செல்வதுக்கு முன் இறைவனிடம் நீங்கள் வரும் தேதியை அடியேனுக்கு உணர்த்துங்கள் என்று வேண்டினேன் .மூன்றாவது நாள் கனவில்............. அதற்கான விடை கிடைத்தது......... கனவில் எனக்கு தெரிந்த நபர் ஒருவர் எந்திரங்களுக்கு சக்தியேற்றி தரும் ஒருவரிடம் செல்கிறார்..அந்த நபர் அவரிடம் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை எந்திரத்தில் ஜெபித்து தருகிறேன்... ஏன்னென்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விரைவில் வரப்போகிறார்.. என்று கூறினார்.மேலும் மகா அவதார் பாபாஜிக்கும் இந்த உண்மை தெரியும்.என்று கூறினார்...மேலும் நான் அந்த கனவில் என் பாட்டி ஒருவரிடம் பாட்டி அசைவம் உண்பதை நிறுத்தி விடுங்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விரைவில் வரப்போகிறார்... என்று கூறினேன்..அப்படி கூறும் போது என்னுள்ளே ஒரு ஆணித்தரமாக உணர்த்தப்பட்ட ஒன்று..ஆண்டவர் விரைவில் வருகிறார்.. பல வருடங்கள் எல்லாம் ஆகாது..ஆனால் மிக விரைவில் வருகிறார் என்று உணர்த்தப்பட்டது.. மேலும் அந்த உணர்தல் எப்படியிருந்தது என்றால் நமக்கு பிடித்த நபர் யாராவது நாளைக்கு வருகிறார்கள் என்றால் நமக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கும் ஆனால் அதே நபர் நம் வீட்டிலிருந்து ஒரு 30 k.m தொலைவில் தான் இருக்கிறார் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றால் நமக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் அதே போன்ற உணர்வு.. ஆணித்தரமான உணர்வு..இது இறைவன் மற்றும் சித்தர்கள் அடியேனுக்கு உணர்த்தியதாக கருதுகிறேன்.மேலும் ஆண்டவர் வரும்போது முயற்சியில் இருக்கலாம் என்று எண்ணாதீர்கள்...தற்போதே உங்கள் முயற்சியை தொடங்கிவிடுங்கள்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

🗺 Kanyakumari district - 👀Dream
👨‍🎤 Suresh
⏳ 3 months, 1 week ago

October 13 2022:நான் ஒரு இடத்தில் இருந்தேன் .என்னை கைது செய்ய 4 வெளிநாட்டவர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்து "winter is coming ' என்ற வாக்கியத்தை சொன்னேன். பின்பு அங்கிருந்த அவர்களும் "Yes, The winter is coming" என்ற வாக்கியத்தை கூறி சென்று விட்டார்கள்.

🗺 Chennai - 👀Dream
👨‍🎤 I.Pratheesh
⏳ 3 months, 1 week ago

நான் கூறுவது சற்று வியப்பாக தான் இருக்கும் ஆனால் என் கனவில் உணர்ந்தப்பட்ட ஒன்று.அதாவது ஒரு நாள் எப்பவும் போல தூங்க சென்றேன் உலக அழிவை பற்றியோ அல்லது ஆன்மீகத்தை பற்றியோ ஆண்டவர் பூமிக்கு வருவதை பற்றியோ எதையும் நினைக்கவில்லை உலகியல் விஷயங்களை பற்றி மட்டும் தான் நினைத்தேன்.. .தூங்கும் முன் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை கூறி தூங்கினேன்... தூக்கத்தில் கனவு வந்தது..அதில் உலகம் முழுவதும் நிலநடுக்கம்..அதில் பெரும்பாலான பகுதிகள் மண்ணோடு மண்ணாக உள்ளே புதைந்தது..2012 படத்தில் வருவது போல எல்லா வீடுகளும் கட்டிடங்களும் உள்ளே புகுந்தது.பல உயிர்கள் இறந்துவிட்டன.நான் என் பாட்டி வீட்டில் இருந்தேன்...என் பாட்டி வீடு மற்றும் இன்னும் சில வீடுகள் மட்டும் மண்ணில் புதையாமல் இருந்தது..ஆனால் மீண்டும் ஒரு நிலநடுக்கத்தில் வீடு நிலைகுலைந்துவிட்டது..ஆனால் மண்ணுக்குள் புதையவில்லை ஏதோ ஒரு சக்தி புதையாமல் காப்பாற்றுவதை உணர்ந்தேன்.நான் வீட்டின் மாடிக்கு சென்று.. அனைவரிடமும் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை கூறுங்கள் என்று கத்தி கூறினேன்..அந்த சமயத்தில் வானத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ தொடங்கியது..சிகப்பு நிறத்திற்கு வானம் மாறியது ஆனால் அழகான சிகப்பு நிறம்..அந்த சிகப்பு நிற வானில் நட்சத்திரங்கள் பல இருந்தது...சிறிது நேரத்தில் மண்ணோடு மண்ணாய் போன வீடுகள் கட்டிடங்கள் மற்றும் அந்த நிலநடுக்கத்தில் இறந்த மனிதர்கள் என எல்லாம் மீண்டும் மேலே வந்தது... இறந்தவர்கள் எல்லாம் உயிரோடு இருந்தார்கள். வானில் பல உயர்ந்த நிலையில் இருக்கும் சித்தர்கள், ஆன்மாக்கள் இருப்பதை உணர்ந்தேன் ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை...

🗺 Kanyakumari district - 👀Dream
👨‍🎤 தேன்மொழி தமிழ்ச்சோலை அம்மா
⏳ 3 months, 1 week ago

வள்ளல் பெருமான் எனக்கு சுத்த தேகத்தில் யோக நித்திரையில் காட்சி கொடுத்த அனுபவங்களை நான் இங்கு பதிவிடுகிறேன் ! நான் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்த பிறகு வள்ளல் பெருமான் செத்தாரை எழுப்புகின்ற சித்து இருக்கு என்று குறிப்பிடுவதை நான் திருவருட்பாவில் படித்துள்ளேன்.பலமுறை வள்ளல் பெருமானிடம் எனது கணவரை எழுப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளேன். 2018 யோக நித்திரையில் : நானும் மற்றும் எனது தோழிகளும் ஞான சபையில் வழிபாட்டில் இருந்தோம். திடீரென்று சபைக்குள் ஒரு பாம்பு வருகின்றது.அங்கே இருந்த நபர் பாம்பை பிடித்து அதன் கழுத்தை வெட்டி விடுகிறார். கழுத்தை வெட்டியவுடன் ரத்தம் தெறித்தது. பின்பு ஞான சபை கதவு திறந்து அதிலிருந்து வள்ளல் பெருமான் வெளியே சுத்த தேகத்தில் வந்தார். வள்ளல் பெருமானின் முகம் கவலையாக இருந்தது. பின்பு அவர் என் இடத்திலேயே வந்து ரத்தம் சிந்துகிறீர்களா என்று கேட்டார். பின்பு ஞான சபையை விட்டு வேகமாக வெளியேறினார். அங்கே இருந்தவர்கள் எல்லாம் பிரம்மை பிடித்தது போல் அய்யய்யோ பெருமான் வெளியே செல்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வள்ளல் பெருமானார் பின்பு வேகமாக ஓடிச் சென்று ஐயா நில்லுங்கள் எங்களை விட்டுட்டு போயிடாதீங்க நில்லுங்கள் ஐயா நில்லுங்கள் ஐயா என்று கத்திக்கொண்டே ஓடினேன். பெருமான் நிற்காமல் சென்று கொண்டே இருந்தார். அவர் நிற்கவேயில்லை பின்பு நான் என்ன செய்தேன் என்றால் வேகமாக சென்று அவரை மரித்து நின்று கொண்டேன். ஐயா நீங்கள் எங்களை விட்டுச் சென்று விடாதீர்கள். நீங்கள் எங்களை விட்டு செல்வது எங்களுக்கு மிகவும் வருத்தம் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்குப் பெருமான் இவ்வாறு பதிலளித்தார் " திருந்த மாட்டேங்கிறார்களே நான் எவ்வளவு சொல்லியும் திருந்தவே மாட்டேங்கிறார்களே" என் இடத்திலேயே வந்து ரத்தம் சிந்த வைக்கிறார்களே என்று கேட்டார். அதற்கு நான் திருந்துவாங்க ஐயா நீங்கள் கூட இருந்தால் எல்லாரும் திருந்துவாங்க ஐயா என்று கூறினேன். அதற்குப் பெருமான் சிரித்தார் . வள்ளலாரருக்கும் முகத்தில் இருந்த கவலை மறைந்து விட்டது.பின்பு நான் உடனே எனது கணவரை எழுப்பி கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு பெருமான் தன் தொடையை தட்டி விட்டு எழுப்பிடலாம் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் மகிழ்ந்தேன். பின்பு பெருமானை பின் தொடர்ந்தேன். பெருமான் ஒரு சத்திரத்திற்குள் சென்றார். நான் அவரிடம் ஐயா இளைப்பாருங்கள் என்று சொன்னேன். விட்டால் பெருமான் அங்கிருந்து சென்று விடுவாரோ என்று நான் அவரை கண்காணித்துக் கொண்டே இருந்தேன். தெருவில் சில மக்கள் நடந்து வருகிறார்கள். அவர்கள் என்னை பார்த்து விட்டு இந்த சத்திரத்தில் யாருமே இருக்க மாட்டார்களே என்று கூறி என்னை நோக்கி வந்தார்கள். அங்கே பெருமானை பார்த்தவுடன் ஐயோ ராமலிங்க சுவாமிகள் வந்துட்டாங்க வந்துட்டாங்க ! ஐயா எங்களை விட்டு விட்டு சென்ற நீங்கள் வந்துட்டீங்களா !வந்துட்டீங்களா ! என்று மகிழ்ச்சியுடன் அங்கு அனைவரும் பெருமானின் காலடியில் விழுந்தார்கள். நான் நினைத்தேன் இவர்களெல்லாம் பெருமான் காலத்து ஆட்கள் போல என்று ! அங்கிருந்த அனைவருக்கும் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்து , ஐயோ ராமலிங்க சுவாமிகள் வந்துட்டாங்களே என்று மகிழ்ச்சியில் இருந்தார்கள்.உடனே யோகநித்திரையும் கலைந்தது.சுத்த தேகத்தில் பெருமான் முகமும், உடலும் ஒளியோடு அப்படி ஒரு தெய்வீகமாக பொலிவதை காணும் பேறு கிடைத்தது வரமாகவே எப்போதும் உணர்கிறேன் ஆன்ம நேய சகோதர சகோதரிகளே.

🗺 ஆரணி வள்ளலார் தமிழ்ச்சோலை தருமச்சாலை - 👀Dream
👨‍🎤 Adinath
⏳ 3 months, 1 week ago

கீழே உள்ள தகவல் ரஷியன் மொழியில் இணைக்கப்பட்ட வீடியோவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது: வள்ளலார் பற்றிய தகவல்களும், மக்களுக்கு அவர் ஆற்றிய செய்தியும் அடங்கிய காணொளி. இச்செய்தி இராமலிங்க வள்ளலரால் கட்டளையிடப்பட்டு அவர் கனவில் தோன்றிய அவரது பக்தர் ஒருவரால் எழுதப்பட்டது “சர்வவல்லமையுள்ள கடவுளின் ஒளியை நீங்கள் ஆர்வத்துடன் பார்க்க விரும்புகிறீர்கள், அவருடன் நெருங்கி பழகவும், இந்த அனுபவத்தை ஒரு புதிய விளையாட்டாகக் கருதவும் விரும்புகிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கடவுள் தொடர்பான விஷயங்களில் எந்த விளையாட்டையும் விளையாடாதீர்கள் - இது பொறுப்பற்ற தன்மை. இந்த உச்ச ஒளி (Light of Perfection) எந்த ஒளியையும் அல்லது மின்னலையும் விட மில்லியன் மடங்கு வலிமையானது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் நெருப்புக்கு பயப்படுகிறீர்கள், ஆனால் கடவுளின் ஒளிக்கு அல்ல, ஆர்வத்துடன் அவரை உங்கள் முன் தோன்றுவதற்கு பொறுப்பற்ற முறையில் விரும்புகிறீர்கள். நீங்கள் தயாராக இல்லாதபோது அவர் உங்கள் முன் தோன்றினால் - உங்கள் மனம் பைத்தியமாகிவிடும், தாங்க முடியாத வலியால் உங்கள் உடல் அதிர்வுறும், நீங்கள் ஊமையாகவும் குருடாகவும் மாறுவீர்கள், யாராலும் உதவ முடியாது என்று நீங்கள் நினைக்கவில்லை. உன் வாழ்நாளின் இறுதி வரை அலையும் பைத்தியக்காரனைப் போல் ஆக்கிவிடும். ஒளியின் உன்னத அருளை வெளிப்படுத்தியவரின் அறிவுரையைக் கேளுங்கள், அவருடன் எப்போதும் ஒன்றாக இணைகிறது. உங்கள் மனதை தயார் செய்யுங்கள்; மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் உங்கள் உடலை தயார் செய்யுங்கள். வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தயார் செய்யுங்கள். கொல்லப்பட்ட உயிரினங்களை உண்பதை நிறுத்துங்கள், கெட்ட பழக்கங்களையும் எண்ணங்களையும் அழித்து விடுங்கள், பின்னர் அத்தகைய எளிமையில் என்னிடம் வாருங்கள். ஒளியின் உன்னத அருளைப் பெற நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால் அதை உணர உங்கள் தாயும் தந்தையும் உங்களுக்கு உதவுவது போல் நான் இருக்கிறேன். நான் தெய்வீக கிருபையின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. உங்கள் கவனத்தை என் மீது செலுத்தினால் உங்களால் பார்க்க முடியும், ஏனென்றால் நான் அவருடைய பிரதிபலிப்பு மற்றும் அவரிடமிருந்து வேறுபட்டவன் அல்ல. இருப்பினும், என்னை எப்படிக் கண்டுபிடிப்பது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நான் குறிப்பிட்ட எந்த இடத்திலும் இல்லை; என் தங்குமிடம் முழு பிரபஞ்சம். ஆனால் நீங்கள் என்னை அழைத்தால், நான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பேன். "அருட் பெரும் ஜோதி" என்ற மந்திரத்துடன் ராமலிங்கா என்று அழைக்கவும், நான் வருவேன்" நீங்கள் என்னைப் பார்க்க முடியாது, என்னைத் தொட முடியாது, ஆனால் உங்கள் நுட்பமான சாரத்தால் நீங்கள் என்னை உணர முடியும், ஏனென்றால் நான் அனைத்து படைப்புகளுடன் ஒன்றிணைந்து தங்கியிருக்கிறேன். உங்கள் அனைவரிடமும். எனவே, படிப்படியாக, என் ஒளி உங்களுக்குள் வெளிப்படுத்தும், இது உச்ச ஒளியின் பிரதிபலிப்பாகும். நீங்கள் ஒரு இருண்ட அறையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், அறையை விட்டு வெளியேறி சூரியனைப் பார்ப்பது உடனடியாக சாத்தியமில்லை - அதே போல் நீங்கள் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்கள் மனம், உடல், உணர்வுகளை அருள் ஒளியின் மாற்றத்திற்குத் தயார்படுத்த வேண்டும். ஒளியின் வடிவமாக என்மீது கவனம் செலுத்துவதைத் தொடருங்கள், உன்னதமான கருணையின் ஒளியால் எனக்கு வழங்கப்பட்ட உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான இறுதி ஐக்கியத்தின் சக்தியால் நான் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வேன். என் அன்பான பக்தர்களே, ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்: பூரணத்தின் ஒளி எங்கு போற்றப்படுகிறது - இருளுக்கு சக்தி இல்லை. உங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் மாறும். உங்கள் இதயம் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியது மற்றும் கடவுள் இரக்கத்தால் மூழ்கடிக்கப்படுகிறார், மேலும் உங்களில் பலர் புரிந்து கொள்ள மாட்டார்கள், விமர்சிப்பார்கள், உங்களை விட்டு ஓடுவார்கள், உங்களை சுட்டிக்காட்டுவார்கள். அந்த நிமிடத்தில் இருந்து பல விஷயங்கள் மாறும். இது சுதந்திரம் ஆனால் அது துன்பத்தை ஏற்படுத்தும். எனக்காக இதைச் செய்ய நீங்கள் தயாரா? நான் இந்த ஒளியைப் பற்றி ஒரு கவிதை வடிவத்தில் பேசினேன், ஆனால் என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை யார் உணர்ந்தார்கள்? அழகான கவிதைகளின் மீது காதல் வயப்பட்டு, வசனத்தின் அழகில் வசப்பட்டு, அர்த்தத்தால் அல்லாமல், அவற்றின் உண்மையான மதிப்பை மறந்துவிட்டனர் பலர். பக்தி என்பது இறுதி வழி, நீங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், உன்னத அருளின் ஒளியை நீங்கள் என்றென்றும் மறந்துவிடலாம். கடவுளுக்காக தன்னை தியாகம் செய்ய விரும்பாதவர்களுக்கு இது வராது, எப்போதும் உங்களிடமிருந்து மறைக்கப்படுவார். பழைய வாழ்வு, உலக இன்பங்களை விரும்புபவராக இருந்தால், பரிபூரண ஒளியைப் போற்றி நான் எழுதிய என் கவிதைகளைத் தொடர்ந்து அழகாகப் பாடி, யாத்திரைத் தலங்களில் சுற்றித் திரிந்து, கண்ணீருடன் மந்திரங்களைச் சொல்லி, விடுமுறையைக் கொண்டாடலாம் பூசம் மாதத்தில்.ஆனால் இந்த வழியில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், உன்னத அருளின் ஒளியின் துதியிலிருந்து என் கண்களின் கண்ணீரை உங்களால் பார்க்க முடியாது. என் உண்மையான குழந்தைகள் விளையாடுவதில்லை; இரவும் பகலும் அவர்கள் தங்கள் மனதையும் உடலையும் தெய்வீக மாற்றத்திற்கு தயார் செய்கிறார்கள்; இரவும் பகலும், எங்கும், எந்த இடத்திலும் நான் அவர்களின் இதயங்களில் தங்கியிருக்கிறேன்; அவர்களின் உயிர்-என் மூச்சு, அவர்களின் மனம்-என் மனம், அவர்களின் சொல்-என் சொல். தெய்வீக அருளை வழங்குவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் என் சார்பாகப் பேசத் தகுதியானவர்கள்; அவர்கள் விளையாடுவதில்லை ஆனால் என்னுடைய உண்மையான அறிவை பரப்புகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில்தான் நான் முழுவதுமாக வசிக்கிறேன். அவர்கள் என் உண்மையான மகன்கள் மற்றும் மகள்கள். மீதமுள்ளவர்கள் வெறுமனே பின்பற்றுகிறார்கள். நான் புறப்படுவதற்கு முன், அருள் ஒளியின் சபை கோவிலின் கதவை மூடிவிட்டேன், ஆனால் உண்மையில் எனது கோட்பாட்டை உணர தகுதியான சீடர் கிடைக்கவில்லை. நான் சென்ற பிறகு கோவிலை திறந்தார்கள் ஆனால் அருள் ஒளி இருக்கிறதா? மிக உயர்ந்தவருடன் இணைந்தவரின் எனது சாட்சியங்களை மீறுதல்… அந்த இடங்களில் என் ஆன்மீக குழந்தைகள் இல்லை, அந்த சுவர்கள் காலியாகிவிட்டன, அந்த நிலம் வறண்டு போனது. எனது வசிப்பிடம் எங்கே என் குழந்தைகளின் இதயங்களில் கருணை ஒளியின் அனைத்து உயிரினங்களின் மீதும் அக்கறையும் அக்கறையும் இருக்கிறது, அங்கு எனது படைப்புகள் பொக்கிஷங்களாக மதிக்கப்படுகின்றன, திருமணத்தைப் போல விடுமுறை நாட்களில் பாடுவதில்லை. கேள் என் அன்பே... நான் நிரந்தரமாக இருப்பவன். நான் எப்பொழுதும் பகிர்ந்து கொண்டேன், எதையும் எடுக்காமல் பகிர்ந்து கொண்டேன். ஆனால் என்னைப் பின்பற்றுபவர்கள் எடுத்துக்கொண்டும் எடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள், பகிர்ந்துகொள்ளவில்லை (கொடுங்கள்). ஆனால் எனது மகன்களும் மகள்களும் எனது அறிவை மட்டுமே பகிர்ந்து (கொடுக்கும்) மற்றும் உண்மையிலேயே பாராட்டும் தருணம் விரைவில் வரும். நான் அனுபவித்த அனைத்தையும் அவர்கள் அனுபவிப்பார்கள், நான் செய்த அனைத்து படிகளையும் அவர்கள் கடந்து செல்வார்கள். அத்தகைய மக்களிடையே, அந்த இடங்களில் நான் வசிக்கிறேன்: அவர்களின் செயல்கள்-என் செயல்கள், அவர்களின் வார்த்தைகள்-என் வார்த்தைகள், அவர்களின் மனம்-என் மனம், அவர்களின் இருப்பு-என் இருப்பு. இது உண்மையில் உண்மை!!! இராமலிங்கரின் செய்தி மகா கருணையின் பிரதிபலிப்பாகும்.

🗺 Russia - 👀Dream
👨‍🎤 Bharathi
⏳ 3 months, 1 week ago

நான் 2022 டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வள்ளலாரிடம் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று என்னை வழிநடத்துங்கள் என்று கேட்டேன் . அன்று இரவு வள்ளலார் எனது கனவில் தோன்றி வகுப்பு எடுத்தார் . போர்டில் AXYB என்ற ஆங்கில எழுத்து எழுதி இருந்தது . எனக்கு அது என்னவென்று புரியவில்லை !

🗺 Chennai - 👀Dream
👨‍🎤 Bharathi
⏳ 3 months, 1 week ago

நான் அக்டோபர் 2022 மாத கடைசியில் ஒரு நாள் வள்ளலாரிடம் , யாரும் கடவுளைப் பற்றி சொன்னால் கேட்க மாட்டேங்கிறாங்க என்று கூறி அழுது கொண்டிருந்தேன்! அன்று இரவு வள்ளலார் எனது கனவில் தோன்றி " நீ போ நான் பார்த்துக் கொள்கிறேன் "என்று பதில் கூறினார் . நான் அந்த இடத்தில் வள்ளலாரை உணர்ந்தேன்.

🗺 Chennai - 👀Dream
👨‍🎤 அஜய்
⏳ 3 months, 1 week ago

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விளக்கு தியானம் செய்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க கண்களை மூடிய சிறிது நேரத்தில் நெற்றியில் அழுத்தம் ஏற்பட்டது, பின் காதுகள் அடைத்தன, ஓம் என்ற மந்திரமும் பின் இறைவன் பற்றிய பாடல்கள் கேட்டது, பின் சிறிய வெள்ளை நிற ஒளி மத்தியில் தெரிந்து பின் விழித்து கொண்டேன்

🗺 ஞான மலை - 👀Real
👨‍🎤 மணிகண்டன்
⏳ 3 months, 2 weeks ago

அதிகாலை மணி 3:30 - 4:30 மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தேன். அந்த இடத்திலே கனவில் நான் வள்ளலாரோடு பேசிக் கொண்டிருக்கிறேன். என் முன்னால் அவர் நிற்க...அவரை பார்த்து நான்.. பெண்களை பார்த்தால் காமம் ஏன் எழுகிறது.... நான் தா எனக்கு காமம் வேண்டாம் சொல்ற ல ....எனக்கு ஏன் இப்படி எண்ணத்த கொடுத்து என்ன சோதிக்கிறீங்க சொல்லி கேட்டேன்.... அன்றிரவே என் கனவில் வந்து.... ஐயா: தம்பி, நீ கேட்ட கேள்வி நியாயம் தான். அதுக்கு நீ உன்னோட பார்வையை மாற்றவேண்டும். நான் : மாற்றனும் நா என்ன பண்ணனும்.....இதுக்கும் ஒரு பாட்டு பாடதீங்க புரியர போல சொல்லுங்க.... ஐயா: (குறுநகையுடன்) நீ உன் எதிரில் வருபவர்களை ஜோதியாக பார்க்க வேண்டும். நான் : ஐயா, உண்மையில் நான் அப்படி பார்க்க தான் நினைக்கிறேன். ஆனால் முடியலயே.. ஐயா: சரி இங்கே வந்து பார் (என்னை வீட்டின் மாடியிலிருந்து பார்க்க சொன்னார்) ஐயா: இப்பொழுது என்ன தெரிகிறது.. எனக்கு எதிர் வீட்டு குழந்தை விளையாடி கொண்டிருந்தால்.. உடனே ஒளி ஆகிவிட்டால்...பக்கத்து வீட்டு அக்கா தெரு விளக்கி கொண்டிருந்தவர் உடனே ஒளியாகி விட்டார்....இப்படியே....தெருவில் வருபவர்கள் போகிறவர்கள்...நாய்கள் எல்லாம் ஜோதியாகி விட்டு அவர்கள் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்..... கண்களில் நீர் வழிய அவரை பார்த்தேன் அவரும் ஜோதியாகவே இருந்தார் அவரை கையெடுத்து கும்பிட்டேன். அவர் தம்பி உனக்கு புரியும் படியாக .... ஆண் உடல் பெண் எல்லாம் எல்லாம் வாகனமே.... Bike ah இருந்தால் ஆண் scooter ஆக இருந்தால் பெண்.... வண்டியை ஓட்டுகிற ஆன்மாவை விட்டுட்டு வண்டியை பார்த்து நீ மயங்கினால் நான் எப்படி பொறுப்பு.... நீ வெளியுலகிற்கு வந்து பார்த்தால் எல்லா வகையான வண்டியையும் எல்லோரும் ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள்.... அதாவது ஆணுக்குள் பெண், பெண்ணுக்குள் ஆண்....இந்த நிலையை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.....விரைவில் புரிந்து கொண்டு வா.....அருட்பெரும் ஜோதி....அருட்பெரும் ஜோதி.....தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.... என்று சொல்லி கொண்டு மறைந்து விட்டார்....

🗺 இகலோகம் - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

Nov 9 2022 அன்று நான் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வரும் தினத்தை எனக்கு அறிவிக்குமாறு வேண்டிக் கொண்டு. பின்னர் தூங்கிவிட்டேன். பின்பு இதைப் போன்ற கனவு வந்தது. கனவில் பெரியாரின் உருவப்படம் தோன்றியது. பின்னர் ஒருவர் பேசத் தொடங்கினார்." வள்ளலாரை வருவிப்பதற்காக மூன்று மாதங்களாக பூஜை நடந்து கொண்டிருக்கிறது. அது வருகின்ற டிசம்பர் மாதத்துடன் முடிகின்றது. யாரும் வள்ளலாரை திட்டாதிங்க. அவர் சம்பந்தப்பட்டு இருக்கும் சிலைகளையோ அல்லது லிங்கத்தையோ திட்டாதீங்க. வள்ளலார் சாதாரண ஆள் கிடையாது. பின்பு வள்ளலார் கையெழுத்தால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் தோன்றியது. அதில் அருட்பெருஞ்ஜோதி என்ற எழுத்து மட்டும் எனக்கு ஞாபகம் உள்ளது. பின்னர் சத்திய ஞான சபை தோன்றியது அதன்அருகில் நிறைய சித்தர்கள் அமர்ந்திருந்தார்கள்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 APJ
⏳ 3 months, 2 weeks ago

one day I cried to see arutperumjothi andavar and that day I had a strong vibration at puruvamathi and I closed my eyes and arutperumjothi came. After that whenever I think of it, it came. But it use to be so silent. As vallalar said after seeing apj I didn't experience any hard time in life after that and my eyes didn't get harm at the same time. Arutperumjothi thaniperumkarunai

🗺 Tamilnadu, Madurai. - 👀Real
👨‍🎤 கார்த்தி கேயன்
⏳ 3 months, 2 weeks ago

Dec 1 2022: என் வீட்டு கயிற்று கட்டிலில் உறங்கிக்கொண்டு இருப்பது போல் கனவு எளிமையான குடிசை வீடு அப்போது இராமலிங்க வள்ளல் பெருமான் குடிசைக்குள் நுழைகிறார் நானோ உறங்கிக்கொண்டு இருக்கிறேன் அவர் என்னருகே வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டு என் வலது உள்ளங்கையை பிடித்து அவர் நெஞ்சிடம் வைத்துக்கொண்டு உன்னோடு தான் நான் எப்போதும் இருக்கிறேன் நீ சரியான வழியில் தான் வந்துகொண்டு இருக்கிறாய் இப்படியே இதையே கடைபிடி உன்னை ஓவ்வொரு அணுவாக ஆட்கொண்டு விடுகிறேன் என்கிறார்.

🗺 கோயமுத்தூர் - 👀Dream