📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience : 167📜
👨‍🎤 A P அருள்மணி
⏳ 6 months, 3 weeks ago

என் பெற்றோர்கள் வள்ளல் பெருமான் பக்தர்கள். என்னுடைய பெயரே அருள்ஜோதி. ஆனால் நான் நியூமராலஜிபடி அருள்மணி என்று மாற்றி வைத்துவிட்டேன்..கனவில் ஒரு நாள் வள்ளல் பெருமான் தோன்றி ஏன் பெயரை மாற்றினாய். அருள்ஜோதி என்ற பெயர் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது தெரியுமா என்றார்.இன்னும் பல அதிசயங்களை நடாத்தி இருக்கிறார்.நன்றி ஆண்டவரே.

🗺 கோயமுத்தூர் - 👀Dream
👨‍🎤 மதன் குமார்
⏳ 7 months ago

2019-ல் இருந்து சன்மார்க்கப் பார்வையில் பயணிக்கிறேன்.. 2019-ல் ஒரு கனவு, நான் நண்பர்களுடன் புதுக்கோட்டைக்கு(மாணிக்க வாசகரின் ஊர்)சென்றோம். அப்போது ஒரு சித்தர் வந்தார்.. அனைவரும் ஒரு சித்தர் வருகிறார் என்றனர்.. அப்போது சிறிதும் யோசிக்காமல் அவரின் காலில் விழுந்து விட்டேன்.. அவர் வள்ளலார்.. நன்றாக உருவத்தையும் முகத்தையும் காண முடிந்தது சற்று உயரம் குறைவாக இருந்தார்.. அவர் உடண் சில சீடர்கள் இருந்தனர். நீ வணங்கும் தெயவத்தை(அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்) தொடர்ந்து வணங்கு.நீ கேட்கும் அனைத்தையும் கொடுப்பார் என்றார்.ஏதோ ஒரு கோவிலை கூறி அங்கு போக சொன்னார்..பின்னர் தான் வைத்து இருந்த பிரம்பால் மெல்ல ஒரு அடி அடித்தார்.. பின்பு கனவு கலைந்து விட்டது.. அன்றிலிருந்து இன்றுவரை சன்மார்க்கப் பாதையை பின்பற்றுகிறேன்.. ஆன்மிகம் பற்றியும் உலக நடப்பு பற்றியும் அதிகம் படிக்கிறேன்.. முடிந்த வரை உயிர் இரக்கத்தை அதிகரித்து கொண்டே செல்கிறேன்.. யோகங்கள் கற்றும் அதில் மனமோ,முன்னேற்றமும் ஏற்படவில்லை.. தற்போது உணர்கிறேன். யோகஙகள் தேவையில்லை என்பதால்தான் அதில் இறைவன் முன்னேற விடவில்லை போலும்.. எப்போதும் என்னுடைய தோத்திரம் : ஆறாம் திருமுறையில் உள்ள வரிகள் அவை பின்வறுமாறு:”என்பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்முடத்தெம் பெருமானிர், இன்போடு வாங்கி என்னை ஆட்கொண்டிர், என் செயல் ஒன்றிலை யாவும் நும் செயலே” நன்றி!!!

🗺 தஞ்சை - 👀Dream
👨‍🎤 திருமூர்த்தி
⏳ 7 months ago

நிறைய விசயங்கள் நிஜத்தில் தினம் தினம் நடந்து கொண்டு இருக்கிறது நேற்று இருந்து 21 /10/2023சாலையில் செல்லும் வாகனத்தில் az சீரியல் வரவேண்டும் என்று வாள்ளலாரிடம் கேட்டு உள்ளேன் என்னப்பா இப்படி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் ஐயா எனக்கு அப்பா அம்மா அண்ணன் என் கணவர் என் அறிவு உயிர் எல்லாமே அருட்பெருஞ்ஜோதியர் என் குழந்தை வள்ளலார் இராமலிங்கம் என் 2பையன் என்மனைவி பொற்கொடி எங்களின் பெயர்கள் எல்லாம் 6திருமுறைகளிலும் இருக்கிறது இதை படிக்கும் என் சகோதரர் எல்லாம் சந்தேகம் கொள்ள வேண்டாம் என் உயிர் மேல் ஆணை சுத்த சன்மார்க்கத்தை நம்மவர் மூலம் நம்மை ஆட் கொண்டு விட்டார் என்னிடம் இயல்பாகவே இருக்கிறார்

🗺 கரூர் - 👀Real
👨‍🎤 SATHISHKUMAR
⏳ 7 months ago

நான் 2 மாதமாக வள்ளலார் ஐயாவின் வழியில் ஜீவ காருண்யம் ஒழுக்தோடு , உயிர் கொலை முழுதும் தவிர்த்து தாவர உணவுகளை உண்டு வருகிறேன் , நான் மட்டுமே வீட்டில் , தினமும் ஐயாவின் புகைப்படம் முன்பு விளக்கு ஏற்றி வணங்கி செல்வேன் , நான் வேலை முடிந்து வீடு செல்ல 11pm ஆகும் 2 வாரம் முன்பு அம்மா தூங்கி விட்டார் நான் கதவை திருத்து உள்ளே சென்று அம்மாவை எழுப்பிய உடன் அம்மா சொன்னார் நான் வாசலின் வள்ளலார் ஐயாவின் முழு உருவம் பார்த்தேன் ஏதோ சொல்ல வந்தார் நீ எழுப்பி விட்டாய் என்று கூறினார்கள் ..

🗺 Nagapattinam - 👀Dream
👨‍🎤 குப்புசாமி த/பெ சுப்பிரமணி
⏳ 7 months, 1 week ago

நான் மெய்ஞான சபைக்கு முதல் பயணத்தின்போது வழியில் சிறிது உறக்கம் வந்தது அப்போது வள்ளலார் ஜோதி வடிவில் காட்சி கண்டேன்.

🗺 திரு அண்ணாமலை - 👀Dream
👨‍🎤 Kabilan
⏳ 8 months ago

24..09.2023: இன்று அதிகாலை 3.00 மணிக்கு நான் கண்ட கனவு . ஒரு குடுகுடுப்புக்காரர் அவர் அவரது கையில் இருக்கும் அந்த சிறிய உடுக்கை குலுக்கிக் கொண்டு சொல்கிறார். மக்களே எல்லாரும் விழியுங்கள் அருள் பெரும் சோதி ஆண்டவர் வானில் தோன்றுகிறார் என்று உடனே எல்லா மக்களும் ஆகாயத்தை பார்க்கின்றனர். அந்த சோதி வடிவில் பரம்பொருள் எழுந்தருளி காட்சியளிக்கின்றார் . அந்த மக்களுடன் ஒருவர் நடுத்தர உயரத்துடன் மா நிறத்துடன் ஒருவர் நிற்க்கின்றார். அவர் அதுதான் தூய சோதி வடிவான இறைவன் என்று மக்களிடம் உரைக்கின்றார். உடனே எனக்கும் அந்த அரியக் காட்சி என் புருவ மத்தியில் கிடைத்தது . இறைவன் வரும் தருணம் இது மக்களே விழித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது .

🗺 Kanyakumari - 👀Dream
👨‍🎤 Mohanraj
⏳ 8 months ago

என்னுடைய பெயர் மோகன், நான் என் நிலை மறந்த நிலையில் என்னுள் யாரோ என்னுடன் பேசுவது பொல் தோன்றும், அந்த பேச்சு என்னை வழிநடத்தும். எனக்கும் என்னை சார்ந்து இருப்பவர்களுக்கும் நடக்கவிருபதை முன்கூட்டியே சொல்லிவிடும். என் தந்தை எப்படி எவ்வாறு இறப்பார் என்பதை 8 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லிவிட்டது. இவ்வாறு என்னை அந்த குறல் வழிநடத்தும்... நான் அந்த நிலையில் இருக்கும் பொழுது எனக்கு காட்சிகள் கூட தெரியும், அப்படி நேற்று என்னை ஒருவர் அருட்பெரும்ஜோதி மந்திரத்தை பேருந்தில் பயணிக்கும் போதும், தூங்க செல்லும் முன்பும் சொல்ல சொன்னார். அவ்வாறு சொன்னால் நான் கேட்பதை தருவதாக சொன்னார். நான் முதலில் அவரிடம் சித்திகள் கேட்டேன், உடனே அவர் கேட்பதை சிந்தித்து கெள் என்றார். நான் உடனே அருட்பெரும்ஜோதி மந்திரத்தை சொல்ல துவ ங்கிவிட்டேன். அப்போது என் மணம் அலைபாய துவங்கி விட்டது, நான் உடனே அருட்பெரும்ஜோதி ஆண்டவரை என்னை வழிநடத்த கூப்பிட்டேன், உடனே என் பக்கத்தில் ஒருவர் வளர துடங்கினார் அவர் பாத பெருவிரல் அருகில் நான் நின்று இருந்தேன். பார்பதற்கு நான் மிகவும் சிறிய அளவில் தெரிந்தேன், அவர் கால் பெருவிரலில் என்னால் ஏருவதே சிரமம். அவர் என்னிடம், இப்போது உன்னை பார் நீ யார் என்பது உனக்கு புரியும் என்றார். நான் உடனே, நான் உங்கள் நிலைக்கு வரவேண்டும் என்று கேட்கவில்லை, நீங்கள் என் குருவாக இருக்க வேண்டும். உங்கள் கை விரலை பிடித்துகொண்டு உங்களுடன் வரவேண்டும் என்றேன். உடனே என் அருகில் உள்ள பெரிய ஊருவம் மறைந்து, என் உயரத்தில் ஒருவர் உடலில் வெள்ளை உடை அணிந்து என் அருகில் நின்று இருந்தார்... அவர் முகம் தெரியவில்லை.

🗺 Chennai - 👀Dream
👨‍🎤 பூபதிராகவன்
⏳ 8 months, 1 week ago

என் வாழ்வில் பல முறை கனவிலும் நினைவிலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்பட்டு அருளிக் கொண்டுள்ளார். என் உயிரைக் காப்பாற்றிய சத்திய தெய்வம். நினைத்தால் கண்களில் நீர் பெருகுகிறது. நான் ஒருவரின் வீட்டில் சென்று வேண்டுதல் வைத்தேன். காணாமல் போன நகை உடனே வந்தது. இப்போது எனக்கு ரூ.48,600 பணம் ஒரு அன்பரின் மூலம் கொடுத்தார். அய்யா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் தான் நான் வாழ்கிறேன்.

🗺 பழனி - 👀Real
👨‍🎤 விஜயவேந்தன்
⏳ 9 months ago

கனவில் திடீரென்று ஏதோ ஒரு பெரிய இயற்கைப் பேரழிவு நிகழ்ந்தது. மக்கள் அனைவரும் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியூருக்கு புறப்பட்டனர். மிக கோரமான பேரழிவாதலால் நிறைய பேர் இறந்து கிடந்தனர். நானும் என் அம்மாவும் வீதியில் நடந்து செல்லும்போது ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கிடந்தது, அங்கே மீட்பு படையினர் உடல்களைத் தேடிக்கொண்டும் இடிபாடுகளை இயந்திரம் மூலம் அகற்றிக்கொண்டும் இருந்தனர். என் அம்மாவிற்கு தெரிந்த யாரோ நண்பர் இந்த குடியிருப்பில் தான் வசித்ததாக அம்மா கூறி அழுதார். அப்போது இயந்திரம் சில இடிபாடுகளை அகற்றியது, அவ்விடத்தில் மலைபோல் உடல்கள் இறந்து குவிந்து இருந்தன. அப்போது நானும் என் அம்மாவும் அந்த நண்பரின் உடலைக் கண்டோம், நாங்கள் அவ்வுடலை நோக்கி கைகாட்டி இவர்தான் அந்த நண்பர் என்று சொன்னதும் அவ்வுடல் மீண்டும் உயிர்பெற்று எழுந்து வந்தது! அதேபோல் இன்னும் இரண்டு இறந்த உடல்களை எழுப்புவித்தருளினார் ஆண்டவர். எழுந்தவர்களோடு சாதாரணமாக உரையாடிக்கொண்டே வீடு சென்றோம்.

🗺 புதுச்சேரி - 👀Dream
👨‍🎤 ச தனலெட்சுமி
⏳ 9 months ago

சொற்பொழிவு அதில் பேசிகொண்டுறிந்தவர்கள் முகமே தெரியவில்லை அந்தமுகத்தில் வள்ளலார்முகம்தான் தெரிந்தது அதுதான் அடியேனின் முதன்முதலில் வள்ளலாரை தரிசித்தேன் என்னை அறியாமல் அவர்களை என்குருவாக வணங்கிவருகிறேன் அவர்கள்வழிவள்ளாரின் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துசெல்லவேண்டும் என்பது எங்கள் குருவின்கனவு அதற்கான பயிற்சியும் முயற்சியும் கொடுத்து கொண்டேவருகிறார்கள் நீங்கள் கூறுவதுபோல் அசுத்தமாயாசக்திகள் நம்மை அதன்வழிகளில் செல்லவிடாமல் தடுக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன் தங்களின் அறிவு பெருமானார் என்ன சொல்லநினைக்கிறார் என்பதனை விளக்கமாக புரிகிறது பெருமானாரே இந்த விளக்கங்களை உலகினருக்கு எடுத்து சொல்கிறார் என்பதே உண்மை மிக தெளிவு பெற்றேன் நன்றிகள் பல பல

🗺 மதுரை - 👀Real
👨‍🎤 Manigandan
⏳ 10 months, 3 weeks ago

April 8 2023: இன்று காலை எனக்கு ஒரு கனவு வந்தது. நான் மருத்துவமனைக்கு ஒரு நபரை பார்க்க செல்கிறேன். மருத்துவமனையின் படிக்கட்டில் கீழே இறங்கி சென்று நான் அந்த நபரை பார்த்து பின்பு மறுபடியும் படிக்கட்டில் ஏறி மேலே வந்தேன். படிக்கட்டில் ஏறி மேலே வந்ததும் ஏதோ ஒரு கோவிலில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் இடது புறம் திரும்பினேன் அங்கே ஒரு கார் நகர்ந்து கொண்டே இருந்தது . அதைப் பார்த்து ஒருவர் அந்தக் காரை பிடிக்க ஓடி சென்றார். அதற்குள் அந்தக் கார் ஓரிடத்தில் மோதி விட்டது .காரைப் பிடிக்கச் சென்ற இவரும் வழிக்கு சரிவில் விழுந்தார். அந்த இடம் ஒரு மலைப்பகுதி போல இருந்தது. அப்போது அவரைப் பார்த்து நான் சிரித்துக் கொண்டே கேட்கிறேன் "உன்னால் தான் காரை பிடிக்க முடியாது என்று தெரியுமே அப்புறம் ஏன் ஓடிச்சென்றாய், நீ ஓடியது இல்லாமல் கீழே விழுந்து ஒரு செடியை உடைத்தும் விட்டாய் " என்று சொல்லிக் கொண்டு நான் அந்த செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நட செய்தேன். அப்போது திடீரென்று ஒரு நாமம் போட்ட கோவில் தோன்றியது . அங்கே ஒரு பெண் மற்றும் அந்த பெண்ணுடைய தாய் நின்று கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தப் பெண் என்னைப் பார்த்து சத்திய சன்மார்க்க காலம் இனிதே தொடங்கி விட்டது . நீங்கள் இதற்கு மேலாவது சத்தியவான்களாக இருக்க வேண்டும் என்று அந்தப் பெண் கூறினார். நீங்களா ! நான் மட்டும் தானே இங்கே இருக்கேன் அப்படி என்று சொல்லிக்கொண்டு பின்புறம் திரும்பிப் பார்த்தேன் அங்கே என்னுடைய நண்பர் மற்றும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்களின் முகம் blur ஆக இருந்தது. மேலும் அந்தப் பெண் பின்வருமாறு கூறினார் "அவர் சொன்ன வழியில் நிற்க வேண்டும் , அணு அளவும் அதிலிருந்து விளங்க கூடாது . நீங்கள் தான் வழிநடத்தி செல்ல வேண்டும். இதற்கு அப்புறம் இவர்தான் உங்களை வழிநடத்துவார் அப்படி என்று ஒருத்தரை சொன்னார், அவர் யார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அவர் தலைமையில நீங்க வழி நடத்திட்டு போக வேண்டும் என்று அந்தப் பெண் கூறினார். யாருடா இந்த பெண் நம்மகிட்ட இவரு சொல்றாங்களே என்று நினைத்தவுடன் , இந்த பெண்ணுடைய தாய் ஹிந்தியில் ஏதோ கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எப்பா அந்தப் பெண் வடமாநிலத்தைச் சார்ந்தவர் அந்தப் பெண்ணுக்கு தமிழே தெரியாது ஆனால் தமிழில் எவ்வாறு பேசுகிறது என்று கேட்டார். மேலும் அந்தப் பெண் ஹிந்தியில் ஆக்ரோஷமாக சில வார்த்தைகளை கூறினார். ஆனால் அது என்னவென்று எனக்கு புரியவில்லை பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன்.

🗺 Kanchipuram - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 10 months, 3 weeks ago

July 1 2023 / 6:30 AM: நான் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு மந்திரச் சொல் கேட்டது "ஓம் மகா அவதார் பாபாஜியே நமஹ "என்று. அப்போது நான் நினைத்தேன் மகா அவதார் பாபாஜிக்கு சுத்த சன்மார்க்கத்தை போதிக்க வேண்டும் என்று. பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன் . இந்தக் கனவை சிறிது ஆராய்ந்து பார்த்தால் மகா அவதார் பாபாஜி கிரியா யோக நெறியை பரப்பிக் கொண்டுள்ளார் ஆனால் இதுவோ சுத்த சன்மார்க்கம் காலம். சுத்த சன்மார்க்க நெறியின் படியே ஒருவர் முழுமையான மரணமில்லா பெருவாழ்வை அடைய முடியும் என்று வள்ளலார் நமக்கு கூறியுள்ளார். அதனால்தான் நான் கனவிலும் மகா அவதார் பாபாஜிக்கு சுத்த சன்மார்க்கத்தை போதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Harini
⏳ 10 months, 3 weeks ago

July 1 2023 / 6:30 AM : எனக்கு ஒரு கனவு , அதில் ஒரு அறைக்குள் நான் செல்கிறேன்.. அங்கே இரண்டு பேர் அமர்ந்து பேசுகிறார்கள். அவர்களில் ஒருவர் வள்ளல் பெருமான் .அவர் தரையில் ஒரு மனை போன்ற ஒன்றின் மேல் அமர்ந்து இருக்கிறார் .அவர் இருக்கும் திசை கிழக்கு (say) என்றால் அவர் அருகில் தெற்கு நோக்கி ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவர் யோகங்களை பின்பற்றுபவர் போல எனக்கு தோன்றுகிறது.. நான் உள்ளே சென்றதும் வள்ளல் பெருமான் என்னை பார்த்து தண்ணித்தியம் தேவை என்று கூறி விட்டு மீண்டும் அவரிடம் பேச திரும்பி விட்டார். பார்ப்பதற்கு அவரை யோகம் விடுத்து தயவு நெறிக்கு அழைப்பது போல இருந்தது. மேலும் அந்த யோகியை பார்ப்பதற்கு மகா அவதார் பாபாஜி உடன் தொடர்புடையவர் போல் இருந்தது. வள்ளலார் திரும்பிய விதம் எவ்வாறு இருந்தது எனில் "இரு இவனை திருத்தி விட்டு வருகிறேன் என்பது போல் இருந்தது"

🗺 Kanchipuram - 👀Dream
👨‍🎤 Sujatha M
⏳ 11 months, 1 week ago

May 10 2023: விடியற்காலை 3 மணியில் இருந்து திருட்சபைக் கண் கவனம் வைத்திருந்தோம். முகம் மட்டும் ஒளியாக உள்ளது. வள்ளல் பெருமானுக்கு . வெண்மை நிறமான ஆடை உடுத்தி உள்ளவர்கள். ஆனால், ஒவ்வொரு மனிதர்களின் கைகளைக் கோர்த்து 100-200 நபர்களுடன் வள்ளல் பெருமான் நடந்து வருகிறார்கள் அனைவருமே வள்ளல் பெருமான் போலவே இருக்கிறோம். ஜப்பான், சீனா மக்கள், போல கூட்டம் கூட்டமாக வள்ளல் பெருமான், உடன் இணைந்து அனைத்து மக்களும் ஒன்றாக வருகிறார்கள், போகிறார்கள். திடீர் என்று வானத்தில் ஒளியாக பறக்கிறோம். அனைவருமே. அடுத்த நொடியே மிகச்சிறிய அணுக்கள் கூட்டமாக பயணிக்கிறோம். ஆக, எல்லா மக்களும், வள்ளல் பெருமான் போல முகம் மட்டுமே ஒளியாக பிரகாசிக்கிறது. வெண்மை நிறமான ஆடைகள் அணிந்திருக்கிறோம். கைகள் மட்டும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து காணப்படுகிறது. எங்கு சென்றாலும், கைகள் மட்டும் பிரியவே இல்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக ஒளியாக , பயணிக்கிறோம். பூமியில் இருந்து வானத்திற்கும். பிறகு புதுப்புது இடங்கள், ஒன்றாக ; இணைந்து செல்கிறோம். ஆனால்.; எதுவுமே பேசவில்லை. இத்தகைய காட்சிகள் பலப்பல தோன்றுகிறது. ஆனால் யாம், வீட்டில் கட்டிலில் படுத்திருப்பதையும், வானத்திலிருந்து அடியால், கண்டோம். பிறகு, எம்முடைய ஒளி மட்டும் கீழே வருகிறது. எம்முடைய உடலில் கலந்து விடுவதை கண்கூடாக! யாம், காண்கிறோம். நேற்று மதியம் தான் யாம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்,கேட்டேன். தயவு, கருணை, அருள், அன்பு, புலால் மறுத்தல், ...குணங்களை கடைபிடித்தால், கூட இரண்டு, மூன்று நாட்கள் ஆக, பெருமான் என்னிடம்; எதுவுமே பேசவில்லை. எம்மீது ஏதோ கோபம். அதனால் தான், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். பேசவில்லை என்று நினைத்தேன்.ஆனால், இன்று மிகப்பெரிய அற்புதமான காட்சியாக காண..... முடிந்தது. கோடான கோடி நன்றிகள்.உலக மக்களுடன் இணைந்து கரம் பிடித்து வள்ளல் பெருமான், மிகப்பெரிய ......... புதியதாக மக்களை வழிநடத்தி வருகிறார்கள் என்பதை, இதன் மூலம் உணர முடிகிறது.

🗺 Villupuram - 👀Dream
👨‍🎤 Sudha Subramanian
⏳ 11 months, 2 weeks ago

நான் ஒரு சிவன் பக்தை.எனக்கு வள்ளலார், அருட்பெரும்ஜோதி பற்றி அதுவும் தெரியாது காலம் அது.அப்போது நான் 2019 வடலூர் போகும் நிலை வந்தது. அப்போ இருந்த பிரச்சினையால் ரொம்ப மனசு கஸ்டதுல இருந்தேன். ஒரு பெண்ணுக்கு உதவி பண்ண போய் அவங்க மாமியார் ரொம்ப பிரச்சினை பண்ணிட்டாங்க. அவங்க மாமனார் வள்ளலார் ஃபாலோ பன்னுவர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை பார்த்து பேசலாம் என்று வடலூர் கோவில் போய் இருந்தேன். என்னையும் அந்த இடம் ரொம்ப அமைதி,நிம்மதி கொடுத்தது. இப்போ பேச வேண்டாம் nu avanga வீட்டுக்கு போய் பேசலாம் வந்துடேன். ஒரு நாள் அவங்க வீட்டு போய் பேசும் போது அவர் இல்லை அவங்க மாமியார் இருந்தாங்க.அவங்க நான் பண்ண உதவி தப்புன்னு பேசிடங்க.எண்டா உதவி பண்ண எனக்கே முதுகுல குத்துற மாதிரி இருந்தது.அவங்க வீட்டுல இருந்த வள்ளலார் போட்டோவை பார்த்தேன்.நான் என்ன தப்பு பணேன் இப்படி அவமானப்படுதிங்களே...அழுதுகிட்டே வீடுக்கு வந்து சாப்பிடாம தூங்கிடேன்ன...தலைவலி தாங்க முடியல..அப்போ கண்ண முடி இருக்கேன் Orange colour லைட் சுத்துற மாதிரி இருக்கு அதை பார்த்துகிட்டு இருந்தேன் தலை வலி போய்டுச்சு, அப்படியே மனசு அமைதி ஆகிடுச்சு... அந்த light பார்த்துகிட்டே தூங்கிட்டேன். எனக்கு தெரிஞ்ச iyya கிட்ட dream pathi கேட்கும் போது தெரிஞ்சது...அது தான் அரும்பெரும்ஜோதி என்று...

🗺 Madurai - 👀Dream
👨‍🎤 Dhanamala
⏳ 11 months, 2 weeks ago

21.03.2023 : எனக்கு தேவையில்லாத விஷயங்களில் இருந்து வெளிவர முடியாத காரணத்தால் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். மேலும் போலி குருமார்களை நம்பிக்கொண்டிருந்தேன் . இப்படி இருந்த நிலையில் ஒரு கனவு வந்தது. நான் கனவில் திடீரென்று மேலே பறந்து கொண்டிருந்தேன். கீழே பார்த்தால் நான் பின்பற்றிய போலி குருமார்கள் நின்று கொண்டிருந்தார்கள். திடீரென்று வள்ளலார் காட்சியளித்து அங்கிட்டு போ என்று வலது புற திசையை காட்டினார் பின்பு ஒரு கோவில் தெரிந்தது.

🗺 Theni - 👀Dream
👨‍🎤 Kabilan
⏳ 1 year ago

May 16 2023 : கனவில் தோன்றிய கூறிய அறிவுரை அதிகாலை பொழுது ஒரு 3.30 மணி இருக்கும் ஒரு எளிமையான தோற்றத்தில் ஒருவர் என் முன் தோன்றினார் அவர் என்னிடம் சில அறிவுரை கூறினார் நீ உன்னுடைய சித்தியை தவறுதலாக பயன்படுத்தி விட்டாய்‌ என்று கூறினார் இதனால் உனக்கு பின்விளைவு உண்டு என்றும் உரைத்தார் அதன்பின் அந்த விளைவை நானே மாற்றியமைப்பேன் என்று எனக்கு உறுதி அளித்தார் அதன்பின் சில வழிமுறைகளை பின்பற்றி வா என்றார் 1. காலம் எவ்வளவு ஆனாலும் பிரச்சனை இல்லை உன் ஆன்ம ஆற்றலை பெருக்கு என்றார் . 2. இந்த ஆற்றலை பயன்படுத்தி இழந்த காலத்தினை மீட்கலாம் என்றார் 3. சித்தி பெற்றவர்கள் மேல் நிலை உள்ளவர்கள் அனைவரும் மனிதனுக்கு மூளையாக செயல்படும் காலம் வந்துவிட்டது என்றும் . அந்த காலம் வெகு விரைவில் வரும் என்றும் அந்த காலத்தை நாம் சில அறிகுறிகள் மூலமாக அறியலாம் என்றும் கூறினார் அறிகுறிகள்: உயிர் இரக்கம் பல்கி பெருகி ஒருவருக்கொருவர் உதவுவர் என்றும் சாதி சமயம் அற்ற சமநிலை நிலவும் என்றும் . உலகத்தில் உள்ள அனைத்து பிராந்தியங்களும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வருவர் என்றும் அந்த தருணத்தில் ஆன்ம நேயத்தை பரப்புவதற்க்காக வெண்ணிற ஆடை உடுத்தி ஒருவன் உலக சமநிலையை ஏற்ப்படுத்த வருவான் என்று கூறினார் அந்த ஒருவன் போல் பலர் தோன்றுவார்கள் என்றும் கூறினார் . உலகில் பசி பட்டினியால் அவதி படுபவர்களை மீட்டெடுக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதற்க்கு மேற்க்கத்திய நாடுகள் தலைமை தாங்கும் என்று கூறினார்.

🗺 Kanyakumari district - 👀Dream
👨‍🎤 I.Pratheesh
⏳ 1 year ago

April 2023: அனைவருக்கும் வணக்கம், எனக்கு வந்த கனவு என்னவென்றால்....இரவு தூங்கும் முன் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை கூறிவிட்டு தூங்க சென்றேன்..கனவில் வள்ளலார் திருகாப்பிட்டுக் கொண்ட அறை போன்று ஒரு பெரிய கோயில் இருந்தது...எல்லோரும் கூறினார்கள் அது தான் வள்ளலார் கடைசியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு ஒன்றோடு ஒன்றாக கலந்த இடம் என்று....அப்போது அங்கே வள்ளலார் பற்றி சொற்பொழிவு ஆற்றும் சேலம் குப்புசாமி ஐயா இருந்தார்...நான் அவரிடம் ஐயா வள்ளலார் திருகாப்பிட்டுக் கொண்ட அறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டேன்..அப்போது அவர் என்னை அந்த அறையின் அருகில் அழைத்துச் சென்றார்...நான் அந்த அறையின் முன்னால் நின்றேன் ..திடீரென்று நான்... எல்லோரிடமும் இப்போது என் உடம்பில் இருந்து இன்னொரு உடம்பு இந்த அறையின் உள்ளே செல்லும் என்று கூறினேன்..அப்போது என் உடம்பில் இருந்து இன்னொரு உடம்பு அந்த அறையின் உள்ளே சென்றது...அறையின் உள்ளே என்ன இருந்தது என்றால்.........பெரிய ஜோதி இருந்தது....அது என்னை தன்னோடு இணைத்துக்கொள்ள முயன்றது. ஆனால் நான் பயந்துபோய் வெளியே ஓடி விட்டேன்...நன்றாக தெரிகிறது அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்று..ஆனால் நான் பயந்து ஓடி விட்டேன்...இது நான் எனக்கு வந்து கனவு....கனவு வரும் முந்தைய நாளே இல்லை அதற்கு முந்தைய நாளோ...நான் ஆண்டவரை பற்றி எதுவும் நினைக்காமல் உலகியல் விஷயங்களை பற்றி தான் நினைத்து கொண்டிருந்தேன்..ஆனால் கனவோ இறைவனை பற்றி வந்தது.....எல்லாம் அவன் செயல்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

🗺 Kanyakumari district - 👀Dream
👨‍🎤 Deepika
⏳ 1 year ago

Nov 3 2022 , 3:30 to 4:00 - என்னுடைய 24 வது பிறந்தநாள் அன்று ஒரு கனவு வந்தது . நான் ஒரு ஆஷ் (ash) கலர் பெயிண்ட் அடித்த அறையில் நின்று கொண்டிருந்தேன் .அதற்குள்லே கோல்டன் (golden)!கலர் ரூம் ஒன்று இருந்தது. அதில் துவாரம் இருந்தது .நான் அந்த துவாரத்தில் வழியாக பார்க்கிறேன் .நேராக பார்த்தால் எதுவும் தெரியாது கொஞ்சம் மேலே தள்ளிப்பார் என்று யாரோ சொல்வது போலோ அல்லது என்னுடைய உள்ளுணர்வு ஏதோ தோன்றியது. பின்னர் நான் மேலே தள்ளிப் பார்த்தேன். அந்த அறைக்குள் ஒரு மேடை இருந்தது. அதில் நிறைய சிலைகள் இருந்தது. மனித சிலை ,சிறு தெய்வ சிலை, மறைந்து மறைந்து வந்தது . அதற்கு அப்புறம் பார்வதி சிலை ,சிவன் சிலை ,அதற்கு அப்புறம் சதாசிவன் சிலை அதாவது சிவலிங்கம் , அதுவும் மறைந்து மறைந்து வந்தது . பின்பு ஒரு ஒளியாக அனைத்தும் மாறிவிட்டன. அந்த ஒளி அருகில் வள்ளலார் போல் உடை அணிந்த ஒருவர் வந்தார். இந்த யுனிவர்ஸை (universe eh ) வள்ளலார் போன்ற உடை அணிந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது. யார் என்று யோசித்தேன் .பின்பு ஜோதிக்கு அவர் தீபாராதனை காட்டியது போல் இருந்தது . யார் இவர் ஜோதிக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருக்கிறார் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன் . அந்த நபர் அறைக்கு வெளியையும் நின்று கொண்டிருந்தார் . பின்பு கனவு கலைந்து விட்டது . பின்பு இவ்வாறு யோசித்தேன் . அன்று காலை நான் வள்ளலார் உடைய உருவப்படம் எங்கள் வீட்டில் நுழைவாயிலில் பார்த்ததை நினைத்தேன். பின்பு என்னுடைய கனவில் தோன்றியது வள்ளலார் என்று உணர்ந்தேன். இதுவரையும் நான் வள்ளலார் ஒரு social reformer என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பின்பு நான் அவரைப் பற்றி அறியத் தொடங்கிய போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பற்றின உண்மைகள் வெளிப்பட்டன. பின்பு நான் சன்மார்க்க பாதைக்கு வந்தேன் .புலால் உண்பதை நிறுத்தி விட்டேன். இதற்கு முன் நான் Vedhathri maharishi உடைய வகுப்பில் சில யோக கலைகளை பயின்று வந்தேன். அங்கே அவர்கள் ஒரு வெட்டவெளியில் இருந்து தான் அனைத்தும் தோன்றுகிறது என்று சொல்லுவார்கள் . எனக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் வெளியா அல்லது இருளா அல்லது ஒளியா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. வள்ளலார் எனக்கு புரிய வைக்கும் விதத்தில் , அன்று எனது கனவில் தோன்றி இறைவன் ஒளியாக இருக்கிறார் என்று உணர்த்தினார்.

🗺 Namakkal - 👀Dream
👨‍🎤 Vadivukkarasi
⏳ 1 year ago

அனைவருக்கும் வணக்கம்.... நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்...எனக்கு you tube ல் வள்ளல் பெருமானின் அகவல் நூலை கேட்கும் வழக்கம் இருந்தது.... கேட்க ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் வாழ்வில் நிறைய மாறுதல் ஏற்பட்டது.. வள்ளல் பெருமான் என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று... புலால் உணவை என்னிடமிருந்து விலக்கியது.... 2020 ஆம் வருடம் , ஒரு நாள் நடந்த சம்பவம். புலால் உண்பது தவறு என பெருமானின் கருத்தை ஏற்று சில மாதங்கள் சாப்பிடாமல் இருந்த நிலையில் ஒரு நாள் வீட்டில் அனைவரும் வற்புறுத்தியதால் நான் என் கட்டுப்பாட்டிற்கு தளர்வு கொடுப்பதற்காக நானே என் மனதிற்கு சமாதானம் கூறினேன் ... எவ்வாறெனில் இப்பொழுது சிக்கன் பிரியாணி ரெடியாக உள்ளது... நான் உயிர்கொலை செய்யவில்லை.... அது உயிரற்ற உடம்பாகிவிட்டது.... நான் சாப்பிடாவிட்டாலும் யாராவது இதை சாப்பிட தான் போகிறார்கள்.... நான் சாப்பிடாமல் போவதால் அது மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை... என்று எவ்வளவு காரணம் தயார் செய்ய முடியுமே செய்து விட்டு அன்று பிரியாணி சாப்பிட்டு விட்டேன்.... இரவு தூங்கும் போது ஒரு கனவு வந்தது... அதில் என் மகன் இறந்து விட்டான்... அந்த துக்கத்திற்கு அனைவரும் வந்திருந்தனர்... அப்பொழுது நான் துக்கம் தாங்க முடியாமல் கடும் வெயிலில் பாலை வன மணலில் விழுந்து புழுவைப் போல துடித்துக் கொண்டிருந்தேன்... கதறி கதறி அழுது கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே உள்ள சிலர் என் மகனின் உடலை எடுத்து சென்று பிரியாணி செய்ய வெட்டிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் இது போல செய்ய உங்களால் எப்படி முடிந்தது... இரக்கம் அற்ற பாவிகளே... என் பிள்ளையை சமைக்க எப்படி உங்களால் முடிகிறது... நெஞ்சில் ஈரம் இல்லையா என்று கதறுகிறேன்.... அப்ெபாழுது வெள்ளை முக்காடு போட்டுக்கொண்டு தேஜஸ் நிறைந்த முகத்துடன் ஆழ்ந்த நிதானத்துடன் வள்ளல் பெருமான் கண் முன்னே தோன்றி...ஏன் அழுகிறாய், துடிக்கிறாய் அது வெறும் உடல் தானே... உயிர் போய் விட்டதல்லவா.... இனி அந்த உடலில் உயிர் திரும்ப வரப்போவதில்லை அல்லவா.... பிறகென்ன கவலை என்று கேட்டார்... அலறிக்கொண்டு விழித்தேன்... அது கனவல்ல உண்மையில் என் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது.... பெருமான் எனக்கு புகட்டிய போதனை.... புலால் உண்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள வே இயலாத தவறு ... நிச்சயம் அதற்கான தண்டனை அனுபவிக்க நேரிடும்.... என் மீது அக்கரை கொண்டு அந்த பாவச் செயலிலிருந்து என்னை விடுவித்ததற்கு எனக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆனால் அந்த பாடத்தை அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டிய கடமை இருப்பதை உணர்கிறேன்.... புலால் தவிர்ப்போம்! ஜீவகாருண்யம் கடைபிடிப்போம் இறைவனை அடைவோம் நன்றி!

🗺 தஞ்சாவூர் - 👀Dream