நான் இதுவரை ஜோதி தரிசனம் கண்டதில்லை எனக்கு வெகு நாள் ஆசை .மாத பூசம் அன்று நான் மறந்துவிட்டேன் போக வேண்டும் என்று நினைத்து கொண்டுருந்தேன் முடியவில்லை. அன்று இரவு என் கனவில் ஒரு ஜோதி தோன்றியது .என்ன வென்று புரியவில்லை பின்னர்தான் நான் உன்னர்த்தேன்
🗺 செல்லூர் - 👀Dreamஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் வள்ளலாரின் வருகை குறித்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் 2: Jan 16 2022: நான் எனது நண்பரிடம் கடந்த மூன்று வருடங்களாக தாங்கள் புலால் உண்பதை விடவும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். வள்ளலார் மற்றும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வருகை காலம் விரைவில் வரப்போகிறது ஆதலால் சன்மார்க்கத்துக்கு வா என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவரும் முயற்சி செய்கின்றேன் என்று கூறுவார் ஆனால் புலால் உண்பதை விட்டதில்லை. இவ்வாறு இருக்க இந்த வருடம் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கணவு பின் வருமாறு: அவர் ஓர் அசைவ ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பின்பு cashier ரிடம் சென்று பிரியாணிக்கு எத்தனை ரூபாய் என்று கேட்டார். அதற்கு அந்த cashier நீங்கள் எவ்வளவு கூறினாலும் திருந்த மாட்டீர்களா என்று கேட்டார். பின்பு வள்ளலார் 2022 இல் வரப்போகிறார் என்று கூறினார். அதற்கு என் நண்பர் வள்ளலார் 2024 இல் வருவார் என்று எனது நண்பர் சொன்னார் என்று சொல்ல ! அதற்கு அந்த cashier வள்ளலார் புகைப்படம் பொருந்திய ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அந்த புத்தகத்தில் இடது தாள்ளில் சில பாடல் வரிகள் இருந்தன. அந்த பாடல் வரிகளுக்கு கீழ் மிக பெரிய எழுத்தில் 24-12-2022 என்று இருந்தது. பின்பு கனவு கலைந்தது.... இந்த கனவை என் நண்பர் தொலைபேசி இல் அழைத்து சொன்னார். அவருக்கு கனவில் பார்த்த தேதி மட்டும் சரியாக ஞாபகம் இல்லை என்று சொன்னார்.
🗺 Coimbatore - 👀Dreamஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் வள்ளலாரின் வருகை குறித்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் 1: Dec 12 2021 எனக்கு வந்த கனவு: எனக்கு வேறு ஒரு மாநிலத்தில் வேலை கிடைத்து இருந்தது. அந்த வேலைக்கு நான் சென்றால் அடிக்கடி வடலூர் வரமுடியாது ஆதலால் அந்த வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று நான் அருட்பெருஞ்சோதி ஆண்டவனர பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன். ஒருநாள் அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டே தூங்கி விட்டேன். அப்போது இவ்வாறு கனவு வந்தது. நான் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன் திடீரென்று வெள்ளை நிறத்தில் ஒரு ஜோதி தோன்றியது. நான் அந்த ஜோதியே பார்த்தவுடன் அந்த ஜோதி குல் குதித்துவிட்டேன். அப்போது ஒரு வீடு தோன்றிற்று. அந்த வீட்டில் ஒருவர் உபதேசம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் நிறைய மனிதர்கள் அமர்ந்து இருந்தார்கள். நான் அங்கு நின்று கொண்டு அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். முதலில் அவர் வள்ளலார் கூப்டா தான் வருவாரு இல்லாட்டி வெளியே நின்று வேடிக்கை தான் பார்ப்பார் என்று கூறினார். பின்பு திடீரென்று அவர் கிழக்கு வெளுத்தது அருள்ஜோதி உதயம் என்ற ஒரு பாடலை பாடினார். பின்பு அங்கு இருந்தவர்கள் எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார் ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார்! என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். எனக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன். பின்பு நான் திருவருட்பாவில் கனவில் அவர் பாடியவரிகள் இருக்கிறதா என்று பார்த்தேன். என்ன ஒரு அதிசயம் அந்தப்பாடல் திருவருட்பாவில் இருந்தது ! அந்தப் பாடல் வரிகள் "கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் ! கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே."
🗺 Coimbatore - 👀Dreamநான் ஒரு கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர் உடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களிடம் நான் நீங்கள் இயேசு என்றும் அல்லாஹ் என்றும் கூறுகிறீர்கள் நான் அருட்பெருஞ்ஜோதி என்று கூறுகின்றேன் என்று அவர்களிடம் சொல்வது போல் கனவு வந்தது.
🗺 Coimbatore - 👀Dreamநான் எனது அலுவலகத்தில் வள்ளலாரின் ஆறு அடி திரு உருவப் படத்தை பார்த்தேன். பின்பு எனது நண்பர் ஒருவர் அந்த படத்தை தொட்டார். அந்தப் படத்தில் வள்ளலாரின் முகத்தில் திருநீறு பூசி இருந்தது.
🗺 Coimbatore - 👀Dreamமகா அவதார் பாபாஜியின் உருவப்படம் இருப்பது போல் உணர்ந்தேன். பின்பு ஒரு பெரியவர் என்னிடம் தான் எப்போதும் சூடான நீரை தான் குடிப்பேன் என்று சொன்னார். நான் அவரிடம் வள்ளலாரும் சூடான தண்ணீர் குடிக்குமாறு சொல்லி உள்ளார் என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 👀Dreamவள்ளலார் ஒருவரின் உடலில் இருந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எனது தாய் மற்றும் என்னுடைய அக்கா அருகில் அமர்ந்திருந்தார்கள். பின்பு வள்ளளர் அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை என்று ஒரு கருப்பு பேனாவில் எழுதினார். அந்த எழுத்து அருட்பெரும்ஜோதி அகவலில் வள்ளலார் எழுதிய எழுத்துப் போல் இருந்தது. அவர் என்னை வடிவுடை மாணிக்க மாலை படிக்குமாறு சொன்னார். பின்பு ஏதோ சொல்லிவிட்டு.நானும் இந்தப் பையனும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம் பின்பு சேர்ந்து கொள்வோம் என்று சொன்னார். எனக்கு அவரை கட்டியணைக்கும் போல் தோன்றியது. பின்பு நான் எனது கனவில் இருந்து எழுந்து விட்டேன்.
🗺 Coimbatore - 👀Dreamஇன்று அதிகாலை 2.30 மணி அளவில் நான் கண்ட காட்சி. ஒருவர் வெள்ளை ஆடையுடன் வந்து என்னுடைய பெயரைச் சொல்லி மூன்று முறை அழைத்தார் அதன் பின்னர் என் அருகில் வந்து பெருவிரலை என் புருவ மத்தியில் வைத்து ஆன்மா மிகத் துடிக்கின்றது என்றார் அதன் பின்னர் வெகு விரைவாக மறைந்தார் அவருடைய முகத்தை அவருடைய பல் வரிசையை வர்ணிப்பதற்கு வார்த்தை கிடையாது அவ்வளவு அவ்வளவு பிரகாசம் உடைய அழகும் நிறைந்த பற்களும் வரிசைப் பற்களும் அவர்களும் உள்முகமாக இருந்தன அந்த காட்சி அற்புதக் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது அந்த காட்சியை வர்ணிக்க வார்த்தை இல்லை அந்த திருமுகத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை அவர் வள்ளலார் என்று நான் உணர்ந்தேன் இதுவே நான் கண்ட கனவு.
🗺 யாழ்ப்பாணம் - 👀Dreamநான் ஒருநாள் வடலூரில் இருந்தேன். பிரார்த்தனை செய்யும் இடத்தில் அருண் என்னும் ஒரு நண்பரை சந்தித்தேன். இருவரும் வாழ்க்கையில் நடந்த பலவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் பின்பு தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். நான் திடீரென்று வள்ளல் பெருமான் வேட்டையபுரம் செல்லும்போது ஒரு குகையில் இருந்த இடத்தைப் பற்றி சொன்னேன். அந்த இடம் விழுப்புரம் பக்கத்தில் உள்ளது. பின்பு அருண் சகோதரர் அவருக்கு ஒரு குகையில் இருந்து தவம் செய்து கொண்டிருப்பது போல் கனவு வந்தது என்று கூறினார். நான் அதை கேட்டவுடன் ஆச்சரியப்பட்டேன். பின்பு நாங்கள் இருவரும் வள்ளல் பெருமான் தவம் செய்த குகைக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தோம். காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு நாங்கள் இருவரும் அந்த குகைக்கு சென்றோம். அது இருவருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
🗺 Tirunelveli - 👀Dreamஎன்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் எனது கனவில் வந்தார். அவரிடம் இந்த சனிக்கிழமை அன்று நான் வடலூர் செல்கின்றேன் தாங்களும் வருகிறீர்களா என்று கேட்டேன். பின்பு அவருக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பற்றி கூறினேன் கனவு கலைந்துவிட்டது. பின்பு நான் அலுவலகத்திற்கு சென்று நான் கனவில் கண்ட நபரிடம் தாங்கள் வடலூர் வருகிறீர்களா என்று நேரில் கேட்டேன். அவர் முதலில் வருவதாக சொன்னார் பின்பு ஏதோ வேறு ஒரு வேலை இருப்பதாக சொல்லி வரவில்லை. பின்பு நான் வடலூர் சென்று அவருக்கு ஆறாம் திருமுறை திருவருட்பா புத்தகத்தை வாங்கிச் சென்று கொடுத்தேன் அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
🗺 Coimbatore - 👀Dreamஒரு சிறிய தொலைக்காட்சி எனது அலுவலகத்தில் இருந்தது. அதில் சில திருக்குறள் வாக்கியங்கள் இருந்தன. பின்பு நான் அந்த தொலைக்காட்சியில் சாகாதவனே சன்மார்க்கி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.நினைத்தவுடன் கனவு கலைந்துவிட்டது.
🗺 Coimbatore - 👀Dreamஎனது கனவில் வள்ளலாரின் புகைப்படம் மற்றும் காரமடை அம்மாவின் புகைப்படம் தெரிந்தது. Note: 1970-2000 இந்த வருடங்களில் வள்ளலார் காரமடை அம்மா என்பவரின் உடலில் இருந்து அருள்வாக்கு சொல்லி கொண்டு இருந்தார். இந்த நிகழ்வு கோவை மாவட்டத்தில் நடந்தது.
🗺 Coimbatore - 👀Dreamநான் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அங்கை ஒரு பெண் சிவப்பு நிற புடவை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம் உனக்கு ஆன்ம வேண்டுமா என்று கேட்டார். அதற்கு நான் வள்ளலார் உடைய ஆன்ம ஏற்கனவே என்னிடம் இருப்பதாக சொன்னேன். பின்பு நான் அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை என்று அவரை பார்த்து சொன்னேன். அதை கேட்ட உடன் அவர் பயந்து அங்கு இருந்து நகருந்து விட்டார். நான் கனவில் அந்த பெண் மேல்மருவத்தூர் ஆதி பரசக்தி என்று நினைத்தேன்.
🗺 Coimbatore - 👀Dreamநான் சன்மார்க சங்கத்தில் ஒரு நபருடன் பேசி கொண்டு இருந்தேன். அந்த நபர் என்னிடம் ஒரு கடிதத்தை காமித்தார். அந்த கடிதம் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதி இருந்தது " நான் மக்கள்ளுக்கு உணவு கொடுத்து சேவை செய்ய வேண்டும் என்று இருந்தது". ஆனால் என் பக்கத்தில் இருந்து ஒரு நபர் , இவர் சன்மார்க சங்கத்தில் தங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக என்னிடம் சொன்னார்.
🗺 Coimbatore - 👀Dreamஇது எனது மூன்றாவது கனவு.. பக்கத்து வீட்டு சிறிய பெண் குழந்தைக்கு சரியாக பேச்சுவராது. அந்த குழந்தை என் கனவில் வந்து ஜீவகாருண்யம், ஜீவகாருண்யம் என்று என்னிடம் ஜீவகாருண்யம் செய்ய சொல்கிறது. மேலும் அதே கனவிலே நான் என் தாயிடம் சென்று இந்த குழந்தை இவ்வாறு கூறியது என்று சொன்னேன். அதற்கு என் தாய் "கடவுளை யார் நம்புகிறார்கள் அவர்களுக்கு கடவுள் இவ்வாறு குழந்தை உருவத்தில் வந்து காட்சியளிப்பார்" என்று கூறினார்கள். சிறிது நேரம் கழித்து விழித்து கொண்டேன். மேலும் ஒரு நாள் கனவில் ஒரு கடைக்கு சென்றேன் அங்கு முழுக்க வள்ளலார் படமும் சிலையும் உள்ளதை கண்டேன்.
🗺 Peranamallur, thiruvannamalai district - 👀Dreamநான் எனது கனவில் தேன்மொழி என்பவர் இடம் தாங்கள் புருவமத்தியில் எப்பொழுது அருட்பெருஞ்ஜோதியை பார்த்திர்கள் என்று கேட்டேன். அதற்க்கு அவர் எனக்கு நியாபகம் இல்லை என்று சொன்னார் . பின்பு பெருமானார் (வள்ளலார்) சொல்லியது போல் 24*7 புருவமத்தியில் அருட்பெருஞ்ஜோதியை பார்க்க நமது உடலுக்கு ஆற்றல் இல்லை என்று சொன்னார்.
🗺 Coimbatore - 👀Dreamநான் தேர்வு எழுத திருஅருட்பாவை படித்து கொண்டு இருந்தேன். நான்படித்த பாடல்கள் புதிதாக இருந்தது. நான் கனவில் இருந்நு விழித்தவுடன் அந்த திருஅருட்பா பாடல்கள் மறந்துவிட்டன்.
🗺 Coimbatore - 👀Dreamநான் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு பதிவு செய்துள்ளேன்.இன்று காலை 3.45 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன். சிறிது நேரம் மகாமந்திரம் சொல்லிட்டு இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு படுத்தேன். 5.30 க்கு புருவ மத்தியில் ஒளியை பார்த்தேன் பார்த்தவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்த அதிர்வு ஏற்பட்டது. என் தலைக்குல் ஒரு குழந்தையின் குரலில் ஒரு பாடல் கேட்டது.. 4 வரிகள் கொண்ட பாடல்.. பாடலின் கடைசியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைக்கிறார் என்று முடிந்தது.. நாக்கில் இனிப்பு சுவையாக இருந்தது..மீண்டும் விழித்துக் கொண்டேன்.
🗺 Peranamallur, thiruvannamalai district - 👀Dreamஒரு நாள் விடியற்காலை 5 மணி இருக்கும். தூக்கம் முழுவதுமாக கலையாமல் அப்படியே கண்களை மூடி படத்துகொண்டு இருந்தேன். திடீரென்று புருவ மத்தியில் ஒரு ஜோதி தோன்றியது அந்த ஜோதியுள் ஜோதி தோன்றியது அதை பார்த்தவுடன் உடல் எல்லாம் வியர்த்து விட்டது. உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.. நான் பதறிபோய் எழுந்து விட்டேன்.
🗺 Peranamallur, thiruvannamalai district - 👀Dreamயாரோ ஒருவர் எனது கனவில் உனது தாயின் திருமண வீடியோவில் வள்ளலாரை பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
🗺 Coimbatore - 👀Dream