📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience : 164📜
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நானும் என்னுடன் வேலை செய்பவரும் சத்திய ஞான சபை செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அவர் தவறான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டதை நான் உணர்ந்தேன் .ஆதலால் நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரை எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி விட்டு அவரை வேறு ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டேன். பின்பு அங்கிருந்து நான் ஒரு லாரியை பிடித்துக்கொண்டு எனது இருப்பிடத்திற்குச் செல்ல முயற்சித்தேன்.செல்லும் வழியில் இரண்டு காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு காவலர் எனது அப்பா போல் இருந்தார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

எனது அலுவலகத்தில் வேலைசெய்யும் நபர் கனவில் தோன்றினார்.அவரிடம் நான் சனிக்கிழமை அன்று சத்திய ஞான சபை செல்கின்றேன் தாங்களும் வருகிறீர்களா என்று கேட்டேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நான் ஒரு சன்மார்க்க சங்கத்தை எனது கனவில் பார்த்தேன் .பின்பு நான் புதிதாக வாங்கிய நிலத்தில் சன்மார்க சங்கம் கட்ட வேண்டும் என நினைத்தேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

எனது புருவ மத்தியில் சிறிதாக ஒளி தோன்றியது .அதை நான் உற்று நோக்கினேன். பின்பு இரண்டு செவிகளும் அடைத்துவிட்டது. அருட்பெருஞ்ஜோதி எப்போது திரும்ப வரப்போகிறார் என்று கேட்டேன் அதற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை .பின்புதான் உணர்ந்தேன் இது ஒரு கனவென்று.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நான் எனது கல்லூரி நண்பனின் திருமணத்திற்கு எனது கல்லூரி நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு வீட்டிற்கு தங்கச் சென்றோம் அந்த வீட்டிற்கு செல்லும் பாதையில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த பாதை பாதிக்கப்பட்டிருந்தது. பின்பு நான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி விட்டேன் அந்த வீட்டின் உரிமையாளர் என்னை கூப்பிட்டு நீதான் சாமியாராக போகிறாயா என்று கேட்டார். அதற்கு நான் அமைதியாக நின்றேன். பின்பு அவர் பைபிளிலிருந்து சில பாடல்களை சொன்னார். சொல்லிய பிறகு இயேசுநாதர் விரைவில் வரப்போகிறார் என்று சொன்னார். பின்பு நான் வள்ளலாரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வரப்போவதை அவரிடம் சொல்லலாமா என்று நினைத்தேன். பின்பு நான் அதை அவரிடம் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நானும் எனது நண்பரும் ஒரு அறையில் இருந்தோம். அப்போது அவருக்கு வள்ளலார் நாதம் வாசித்துக் கொண்டு நடந்து சென்றவர்களை பின்தொடர்ந்தது போல் காட்சியளித்தார் கனவில். அதைக் கேட்டவுடன் நான் வள்ளலாரின் உருவம் நாம் அறையில் வைத்திருந்த உருவம் போல் இருக்குமோ என்று நினைத்தேன். பின்பு வள்ளலாரின் உருவப்படம் தெரிந்தது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Anusha
⏳ 1 year, 2 months ago

அனுஷா ஆகிய நான் புதுவை மாநிலத்தில் அரியாங்குப்பம் என்னும் ஊரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வள்ளல் பெருமானின் சன்மார்க்க அறிமுகம் கிடைத்தது. அதுமுதல் தொடர்ந்து அனைத்து தைப்பூச தினத்திற்கும் வடலூரில் ஜோதி தரிசனம் பார்க்க செல்வோம் ஆனால் ஒருமுறை கூட என்னால் முழுமையாக ஜோதி தரிசனம் காண முடியவில்லை ஏனெனில் கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விடுவேன் அதன்பின் யாரேனும் என்னை தூக்கி வருவார்கள் பிறகு எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது வள்ளல் பெருமானிடம் என்னால் இதுவரை தைப்பூச ஜோதி பார்க்க முடியவில்லை ஆண்டவரே! இது என்ன சோதனை என்று முறையிட்டேன். அன்று இரவு 7 திரை நீக்கிய தைப்பூச ஜோதி தரிசனம் பிரகாசமாக என் முன் வெகு நேரம் காட்சியளித்தது நான் வள்ளல் பெருமானுக்கு நன்றி கூறி எழுந்த போது தான் தெரிந்தது கனவில் தோன்றி ஜோதி தரிசன காட்சி கிடைத்தது என்பதை உணர்ந்தேன் அந்த நிமிடத்தை இப்பொழுது நினைத்தால் கூட மெய் சிலிர்க்கிறது என்னே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மகிமை என்று வியந்தேன் இதுவே எனக்கு ஏற்பட்ட அனுபவம் அதை உங்கள் அனைவரின் முன்பும் பகிர்ந்து கொள்கிறேன்.

🗺 Pondicherry - 👀Dream
👨‍🎤 Anusha
⏳ 1 year, 2 months ago

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் என்னிடம் பகிர்ந்து அனுபவம். புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பம் என்னும் ஊரில் வெங்காய வியாபாரி ஆகிய தமிழ்ச்செல்வன் என்பவர் தினமும் வியாபாரம் முடிந்து குடித்துவிட்டு அங்குள்ள வள்ளலார் சபையில் மதிய உணவு அருந்த வருவார். அப்படி வருபவர்களை வள்ளல் பெருமானின் கொள்கைப்படி இங்கு குடித்துவிட்டு வரக்கூடாது என்று சங்க நிர்வாகிகள் கூறுவார்கள். மதிய அன்னதானத்திற்கு முன்பு அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் சொல்லி சாப்பிட அனுமதிப்போம். அப்படி அந்த நபரும் கூறி சாப்பிட்டுவிட்டு சென்றார் .அவ்விரவில் அவருக்கு வெள்ளை நிற ஆடை அணிந்த ஜோதி வடிவில் ஓர் உருவம் அவர் முன்பு தோன்றி அவரை ஆட்கொண்டது. அதுமுதல் அவர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு சங்கத்திற்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்து வந்தார். அவர் அந்த வடிவை பார்த்த நிமிடத்தில் இருந்து அருட்பெருஞ்சோதி ஒன்றே கடவுள் என்ற நிலையை உணர்ந்தார் அப்போதிலிருந்து வள்ளல் பெருமானின் மீது மாறாத அன்பு கொண்ட அவர் தன் வாழ்நாள் முழுவதும் அவருக்காகவே அர்ப்பணித்தார். அவர் நோய்வாய்ப்பட்ட தருவாயிலும் கூட வள்ளல் பெருமான் தன்னை காப்பாற்றுவார் என்ற உறுதியுடன் இருந்து மருத்துவமனைக்கு செல்லாமல் தன் உயிரை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார்.

🗺 Pondicherry - 👀Dream
👨‍🎤 Nivendhan S
⏳ 1 year, 2 months ago

ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும் திடீரென ஏதோ ஒன்று அமுக்குவது போல் ஒரு உணர்வு . நான் உரத்த குரலில் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று கூறினேன் . உடனே அது ஒரு பேரின்ப நிலை எனக்கு ஆயிற்று. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை . எனது ஆன்மாவும் உடலும் வெவ்வேறாகப் பிரிந்ததை உணர முடிந்தது .அது சம்பந்தமாக திருவருட்பா இருக்குமா என்று தேடிப்பார்த்தேன் . " நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின் காலிடத்தே வாழ்கின்றேன் காண் ".

🗺 திருச்செங்கோடு - 👀Dream
👨‍🎤 Nivendhan S
⏳ 1 year, 2 months ago

இன்னொரு நாள் இரவு 12 : 30 மணி இருக்கும் . திடீரென ஒரு முதியவர் என்னுடைய கனவில் தோன்றினார். என்னவோ தெரியவில்லை அவரை பின் தொடர வேண்டும் என நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.கனவில் திடீர்னு 5 பேருக்கு அவர் உணவளிக்க தொடங்கினார். நான் அவருடைய முகத்தை உற்று நோக்க முயற்சிக்கிறேன்..! அங்கிருந்து மக்கள் என திடீரென சத்தம் போட ஆரம்பித்து விட்டனர். கடவுள் கடவுள் என்று எனது இடது புறத்தில் சிறிய ஒரு ரூம் இருந்தது..! மக்கள் சத்தம் போட ஆரம்பித்ததும் அந்த சிறிய கொட்டகையின் கதவு திறந்தது அதற்குள் சிறிய ஜோதி இருந்தது அந்த ஜோதியை வழிபட ஆரம்பித்தவுடன் அந்தப் பெரியவர் மறைந்து விட்டார். மக்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று கூறியவுடன் எனது ஆன்மா தனியாக பிரிந்தை உணர முடிந்தது .நான் எனது படுக்கையிலிருந்து விழித்து கொண்டேன் பொதுவாக இதுபோன்ற கனவுகளை நம்புவதில்லை...! யாராவது கூறினாலும் அதை முட்டாள்தனம் என்றே கூறுவேன்...! ஆனால் எனக்கு இப்படி நேர்ந்த கனவை நம்பலாமா வேண்டாமா என்று எனக்கே சந்தேகம் ஆகி நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை.

🗺 திருச்செங்கோடு - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நானும் எனது நண்பரும் ஒரு இடத்திலிருந்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் எனக்கு சிவன் பிடிக்கும் என்றேன் அதற்கு அவர் கையை உயர்த்தினார் . பின்பு அல தொடங்கினார். பின்பு அவர் இதுவரை உனக்கு சின்ன (அருட்பெரும் ஜோதி) நபரிடமிருந்து அருள்வாக்கு கிடைத்தது இனி உனக்கு பெரிய (சிவன்) நபரிடமிருந்து அருள்வாக்கு கிடைக்கும் என்றார்.அதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது .பின்பு நான் அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன் என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Ganesh
⏳ 1 year, 2 months ago

வள்ளலாரின் முழு உருவம் கனவில் வந்தது.

🗺 Vellore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நான் ஒரு மேடையில் வானியற் பௌதிகத்தை வள்ளலார் உடன் ஒபிட்டு பேசிக்கொண்டிருந்தேன் .அங்கிருந்தவர்கள் அதைக்கேட்டு கைதட்டினார்கள்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நான் எனது அலுவலகத்தில் நின்றுகொண்டு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் அந்த வழியாக சென்றார் .அவர் தனது மொபைலில் முருகன் புகைப்படம் வால்பேப்பர் ஆக வைத்திருப்பார். நான் அவரிடம் வள்ளலாரைப் பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

நான் சித்தி வளாகத்தில் இருந்தேன். என்னிடம் திருவருட்பா புத்தகம் இருந்தது . அதில் புதிதாக பாடல்கள் தோன்றின.அந்த பாடல்கள் மூன்று வரிகள் இருந்தன. அதை நான் நோட் புத்தகத்தில் எழுத முயற்சித்தேன் . எனது நண்பரும் அதை எழுத முயற்சித்தார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arul
⏳ 1 year, 2 months ago

உனக்கு சளி தொந்தரவு வராது அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை சொல் என்று குரல் கேட்டது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arul
⏳ 1 year, 2 months ago

வடலூர் ஜோதி தரிசனம் கனவில் தெரிந்தது

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Ganesh
⏳ 1 year, 2 months ago

இருட்டு அறையில் ஒளி தெரிந்தது.

🗺 Vellore - 👀Dream
👨‍🎤 Ganesh
⏳ 1 year, 2 months ago

வள்ளலாரின் சிலை மீசை உள்ளது போலும் இல்லாதது போலும் தெரிந்தது.

🗺 Vellore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 1 year, 2 months ago

Jul 4 2021 - பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கையில் திருவருட்பா புத்தகமும் இருந்தது. பேருந்தில் இருந்த 2 பேர் என்னை பார்த்தார்கள்.

🗺 Coimbatore - 👀Dream