📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience : 128📜
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

Dec 19 2020 -நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். சன்மார்க்க சங்கத்திற்கு சென்று அதை ஒரு புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்று எண்ணினேன். திடீரென்று வள்ளலாரின் புகைப்படம் தெரிந்தது .அதை பார்த்தவுடன் அதன் அருகில் நான் சென்றேன். அதில் சன்மார்க்க சங்கம் செல்லும் வழி என்று இருந்தது அந்த வழியே நான் பின்தொடர்ந்தேன். அந்த வழியை பின்தொடர்ந்து சன்மார்க்க சங்கத்தை அடைந்தேன். அங்கு வள்ளலாரின் சிலை இருந்தது .அங்கே இருந்த வழிபாட்டு அறை வெறிச்சோடி இருந்தது. விநாயகரின் சிலையும் இருந்தது அதை நான் எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன் அந்த சங்கம் துளசி என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

Dec 30 2020 - ஒரு கெட்ட சக்திக்கும் விநாயகருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்த சக்தியை வைத்துக்கொண்டே விநாயகரால் அந்த கெட்ட சக்தியை சமாளிக்க முடியவில்லை. பின்பு தனது சக்தியை அதிகப்படுத்தினார். சக்தி பெரிதாக பெரிதாக விநாயகரும் பெரிதாகிக் கொண்டே இருந்தார் பின்பு வெடித்து விட்டார் .அந்த வெடிப்பில் இருந்து வள்ளலார் தோன்றினார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

17 oct 2020 - படப்பை சன்மார்க்க சங்கம் கனவில் வந்தது. அங்கே இருந்த மக்கள் அன்னதானத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்,

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

10 Oct 2020 - வள்ளலாரின் புகைப்படம் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்தது .அங்கே நிறைய மக்கள் பசியுடன் இருந்தார்கள்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

6 sep 2020- கனவில் நான் எனது அக்கா எனது அத்தை மற்றும் அவருடைய மகள் சித்திவளாகம் செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம். எனது அக்கா பேருந்தை விட்டுவிட்டார். பின்பு ஓடிச்சென்று பேருந்தில் ஏறினார்

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

31 Aug 2020 - வள்ளலாரின் புகைப்படம் ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு வீட்டில் இருந்தது. அதை நான் எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

29 Aug 2020 -அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற மகா மந்திரம் ஒரு போஸ்டரில் இருந்தது.அதை எனது நண்பர் தொலைபேசியில் மூலமாக புகைப்படம் எடுத்தார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

நான் ஒரு குகையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தேன் . வள்ளலார் என்மீது தண்ணீரை ஊற்றினார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

On July 2 2020 வள்ளலார் திருவருட்பா புத்தகத்தின் மீது அமர்ந்திருந்தார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

நான் எனது நண்பர் மற்றும் ஒரு பெண் சத்திய ஞான சபைக்கு சென்றோம்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

வள்ளலார் ஒரு வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா தெய்வங்களின் பெயரையும் சொன்னார். பின்பு நான் அருட்ஜோதி என்று சொன்னார்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

நான் ஒரு தென்னை மரத்தின் அடியில் நின்று கொண்டு இருந்தேன் . அங்கே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது எனது அம்மா எனது அக்காவின் கல்யாணத்திற்கு இன்விடேஷன் கொடுக்க தயாராகி கொண்டிருந்தார் . எனது மாமா அவரது காம்பவுண்டில் உள்ள செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார் .திடீரென்று அந்த வண்டி கீழே விழுந்தது அதை பார்த்தவுடன் எனது மாமா ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்றார் .அதற்கு நான் இறந்தால் கூட பரவாயில்லை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

வள்ளலார் போல் உடை அணிந்தவர்ஆல் சத்திய ஞானசபை திறக்கப்பட்டது .அங்கே அருட்பெருஞ்ஜோதி மற்றும் மற்ற தெய்வங்கள் இருந்தனர்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

சத்திய ஞானசபை எனது கனவில் தோன்றியது .நான் வெளியே நின்று கொண்டு வணங்கி கொண்டிருந்தேன்.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

வள்ளலார் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் முகம் குழந்தை போல் தோன்றியது.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 venkateswari anbalagan
⏳ 3 months, 2 weeks ago

விளக்கு தியானம் செய்து கொண்டிருந்த போது தீபத்தில் வள்ளலாரை தொடர்ந்து இரண்டாவது நாளும் கண்டேன்.

🗺 Chennai - 👀Real
👨‍🎤 Ragu Aru
⏳ 3 months, 2 weeks ago

பரந்து பட்டதாக இருந்தது. லேசான உணர்வில் அவரும் நானும் ஒன்றாக இருப்பதாகவே உணர்ந்தேன். தங்களுக்கும் எனக்கும் எந்த வேற்றுமையும் இல்லை

🗺 Vedaraniam - 👀Real
👨‍🎤 பார்த்தீபன்
⏳ 3 months, 2 weeks ago

விளக்கு தியானம்(திராடக பயிற்சி)செய்து கொண்டிருந்த போது தீபத்தில் வள்ளலாரை தொடர்ந்து இரண்டாவது நாளும் கண்டேன்.

🗺 கடலூர் - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

நான் காலை 5:01 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலை எனது மொபைலில் கேட்டுக் கொண்டிருந்தேன் .அப்போது திடீரென்று எனது புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றியது பின்னர் இரு காதுகளும் அடைத்து விட்டனர். பின்பு நான் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்ல எனது வாயை திறந்தேன். அப்போது காதுகளில் அடைக்கப்பட்டிருந்த காற்று எனது வாயின் வழியாக வெளியேறிவிட்டது.பின்பு ஒளியும் மறைந்துவிட்டது.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

June 6 2021 7:28am -முதலில் எனது இரண்டு செவிகளும் திடீரென கும்மென அடைக்க தொடங்கியது . பின்பு திடீரென்று நான் எனது புருவமத்தியை பார்க்க தொடங்கினேன் அங்கே துடிப்பு ஏற்பட்டது . பின்பு புருவமத்தியில் ஒளி தெரிய ஆரம்பித்தது. பின்பு ஜோதி ஜோதி ஜோதி சுயம் என்ற பாடல் இடது செவியில் முழுமையாக கேட்டது. அந்த ஒளியை பார்க்க பார்க்க எனது இரண்டு கண்களிலும் அழ வேண்டும் என நினைத்தேன்.

🗺 Coimbatore - 👀Real