📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience : 128📜
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

Feb 7 2021 காலை 9am மணி அளவில் எனது இரு செவிகளும் அடித்துக்கொண்டது.மூன்று முதல் நான்கு முறை அதே மாதிரி அடைத்தது. புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றியது. அந்த ஓளியை பார்த்தவுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

Jan 14 2021 -எனது செவிகள் அடித்துக்கொண்டது. புருவ மத்தியில் ஒளி தெரிந்தது. அதைப்பார்த்த உடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

Dec 1 2020 -3:00pm மணியளவில் வள்ளலார் நிற்கும் உருவம் எனது புருவ மத்தியில் தோன்றிற்று.பின்பு எனது செவிகள் அடைத்தது. பின்பு ஒரு நாதம் கேட்டது.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

25 Jul 2020 -எனது புருவ மத்தியில் ஒளி தோன்றிற்று .பின்பு புருவமத்தி வெப்பமாக தொடங்கியது. பின்பு நான் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

20-Jul-2020 - காலை 12:20am மணி அளவில் எனது புருவ மத்தியில் ஒளி தோன்றிற்று. பின்பு யார் என்று தெரிகிறதா பார்த்துக்கொள் என்ற ஒரு குரல் கேட்டது. குரலுடன் ஒரு நாதம் கேட்டது. அதைப்பார்த்த உடன் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

வள்ளலார் என்னிடம் அவரது கைகளை காமித்து பேசிக்கொண்டிருந்தார். அவரின் முகம் தெரியவில்லை. நான் அவரிடம் எனது உடல் மிகவும் டயர்டாக உள்ளது என்றும் சளித்தொல்லை அதிகமாக உள்ளது என்றும் சொன்னேன். அதற்கு அவர் நீ மருத்துவரை போய் பார் என்றார் . நான் அதற்கு நீங்கள் இருக்கும்போது நான் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னேன். திடீரென்று சித்திவளாகம் கதவு தோன்றியது அங்கே ஒரு மூலிகை தோன்றியது அதன் பெயர் ஒரு நீல பலகையில் இருந்தது

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

நான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒளி தோன்றியது.அந்த ஒளியே பார்த்தவுடன் எனது ஆன்மா உடலை விட்டு பிரிந்து அந்த ஒளி இடம் சென்றது. பின்பு மறுபடியும் ஆன்மா எனது உடம்புக்குள் சென்றுவிட்டது.

🗺 Coimbatore - 👀Real
👨‍🎤 Arun Prakash
⏳ 3 months, 2 weeks ago

எனது அறையில் ஒளி தோன்றியது.அந்த ஒளியே பார்த்தவுடன் எனது ஆன்மா உடலை விட்டு பிரிந்து அந்த ஒளி இடம் சென்றது. பின்பு மறுபடியும் ஆன்மா எனது உடம்புக்குள் சென்றுவிட்டது

🗺 Coimbatore - 👀Real