அனுஷா ஆகிய நான் புதுவை மாநிலத்தில் அரியாங்குப்பம் என்னும் ஊரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வள்ளல் பெருமானின் சன்மார்க்க அறிமுகம் கிடைத்தது. அதுமுதல் தொடர்ந்து அனைத்து தைப்பூச தினத்திற்கும் வடலூரில் ஜோதி தரிசனம் பார்க்க செல்வோம் ஆனால் ஒருமுறை கூட என்னால் முழுமையாக ஜோதி தரிசனம் காண முடியவில்லை ஏனெனில் கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விடுவேன் அதன்பின் யாரேனும் என்னை தூக்கி வருவார்கள் பிறகு எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது வள்ளல் பெருமானிடம் என்னால் இதுவரை தைப்பூச ஜோதி பார்க்க முடியவில்லை ஆண்டவரே! இது என்ன சோதனை என்று முறையிட்டேன். அன்று இரவு 7 திரை நீக்கிய தைப்பூச ஜோதி தரிசனம் பிரகாசமாக என் முன் வெகு நேரம் காட்சியளித்தது நான் வள்ளல் பெருமானுக்கு நன்றி கூறி எழுந்த போது தான் தெரிந்தது கனவில் தோன்றி ஜோதி தரிசன காட்சி கிடைத்தது என்பதை உணர்ந்தேன் அந்த நிமிடத்தை இப்பொழுது நினைத்தால் கூட மெய் சிலிர்க்கிறது என்னே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மகிமை என்று வியந்தேன் இதுவே எனக்கு ஏற்பட்ட அனுபவம் அதை உங்கள் அனைவரின் முன்பும் பகிர்ந்து கொள்கிறேன்.
🗺 Pondicherry - 😴Dream(Sub-conscious)புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் என்னிடம் பகிர்ந்து அனுபவம். புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பம் என்னும் ஊரில் வெங்காய வியாபாரி ஆகிய தமிழ்ச்செல்வன் என்பவர் தினமும் வியாபாரம் முடிந்து குடித்துவிட்டு அங்குள்ள வள்ளலார் சபையில் மதிய உணவு அருந்த வருவார். அப்படி வருபவர்களை வள்ளல் பெருமானின் கொள்கைப்படி இங்கு குடித்துவிட்டு வரக்கூடாது என்று சங்க நிர்வாகிகள் கூறுவார்கள். மதிய அன்னதானத்திற்கு முன்பு அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் சொல்லி சாப்பிட அனுமதிப்போம். அப்படி அந்த நபரும் கூறி சாப்பிட்டுவிட்டு சென்றார் .அவ்விரவில் அவருக்கு வெள்ளை நிற ஆடை அணிந்த ஜோதி வடிவில் ஓர் உருவம் அவர் முன்பு தோன்றி அவரை ஆட்கொண்டது. அதுமுதல் அவர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு சங்கத்திற்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்து வந்தார். அவர் அந்த வடிவை பார்த்த நிமிடத்தில் இருந்து அருட்பெருஞ்சோதி ஒன்றே கடவுள் என்ற நிலையை உணர்ந்தார் அப்போதிலிருந்து வள்ளல் பெருமானின் மீது மாறாத அன்பு கொண்ட அவர் தன் வாழ்நாள் முழுவதும் அவருக்காகவே அர்ப்பணித்தார். அவர் நோய்வாய்ப்பட்ட தருவாயிலும் கூட வள்ளல் பெருமான் தன்னை காப்பாற்றுவார் என்ற உறுதியுடன் இருந்து மருத்துவமனைக்கு செல்லாமல் தன் உயிரை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார்.
🗺 Pondicherry - 😴Dream(Sub-conscious)ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும் திடீரென ஏதோ ஒன்று அமுக்குவது போல் ஒரு உணர்வு . நான் உரத்த குரலில் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று கூறினேன் . உடனே அது ஒரு பேரின்ப நிலை எனக்கு ஆயிற்று. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை . எனது ஆன்மாவும் உடலும் வெவ்வேறாகப் பிரிந்ததை உணர முடிந்தது .அது சம்பந்தமாக திருவருட்பா இருக்குமா என்று தேடிப்பார்த்தேன் . " நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின் காலிடத்தே வாழ்கின்றேன் காண் ".
🗺 திருச்செங்கோடு - 😴Dream(Sub-conscious)இன்னொரு நாள் இரவு 12 : 30 மணி இருக்கும் . திடீரென ஒரு முதியவர் என்னுடைய கனவில் தோன்றினார். என்னவோ தெரியவில்லை அவரை பின் தொடர வேண்டும் என நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.கனவில் திடீர்னு 5 பேருக்கு அவர் உணவளிக்க தொடங்கினார். நான் அவருடைய முகத்தை உற்று நோக்க முயற்சிக்கிறேன்..! அங்கிருந்து மக்கள் என திடீரென சத்தம் போட ஆரம்பித்து விட்டனர். கடவுள் கடவுள் என்று எனது இடது புறத்தில் சிறிய ஒரு ரூம் இருந்தது..! மக்கள் சத்தம் போட ஆரம்பித்ததும் அந்த சிறிய கொட்டகையின் கதவு திறந்தது அதற்குள் சிறிய ஜோதி இருந்தது அந்த ஜோதியை வழிபட ஆரம்பித்தவுடன் அந்தப் பெரியவர் மறைந்து விட்டார். மக்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று கூறியவுடன் எனது ஆன்மா தனியாக பிரிந்தை உணர முடிந்தது .நான் எனது படுக்கையிலிருந்து விழித்து கொண்டேன் பொதுவாக இதுபோன்ற கனவுகளை நம்புவதில்லை...! யாராவது கூறினாலும் அதை முட்டாள்தனம் என்றே கூறுவேன்...! ஆனால் எனக்கு இப்படி நேர்ந்த கனவை நம்பலாமா வேண்டாமா என்று எனக்கே சந்தேகம் ஆகி நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை.
🗺 திருச்செங்கோடு - 😴Dream(Sub-conscious)நானும் எனது நண்பரும் ஒரு இடத்திலிருந்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் எனக்கு சிவன் பிடிக்கும் என்றேன் அதற்கு அவர் கையை உயர்த்தினார் . பின்பு அல தொடங்கினார். பின்பு அவர் இதுவரை உனக்கு சின்ன (அருட்பெரும் ஜோதி) நபரிடமிருந்து அருள்வாக்கு கிடைத்தது இனி உனக்கு பெரிய (சிவன்) நபரிடமிருந்து அருள்வாக்கு கிடைக்கும் என்றார்.அதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது .பின்பு நான் அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன் என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)வள்ளலாரின் முழு உருவம் கனவில் வந்தது.
🗺 Vellore - 😴Dream(Sub-conscious)நான் ஒரு மேடையில் வானியற் பௌதிகத்தை வள்ளலார் உடன் ஒபிட்டு பேசிக்கொண்டிருந்தேன் .அங்கிருந்தவர்கள் அதைக்கேட்டு கைதட்டினார்கள்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் எனது அலுவலகத்தில் நின்றுகொண்டு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் அந்த வழியாக சென்றார் .அவர் தனது மொபைலில் முருகன் புகைப்படம் வால்பேப்பர் ஆக வைத்திருப்பார். நான் அவரிடம் வள்ளலாரைப் பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் சித்தி வளாகத்தில் இருந்தேன். என்னிடம் திருவருட்பா புத்தகம் இருந்தது . அதில் புதிதாக பாடல்கள் தோன்றின.அந்த பாடல்கள் மூன்று வரிகள் இருந்தன. அதை நான் நோட் புத்தகத்தில் எழுத முயற்சித்தேன் . எனது நண்பரும் அதை எழுத முயற்சித்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)உனக்கு சளி தொந்தரவு வராது அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை சொல் என்று குரல் கேட்டது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)வடலூர் ஜோதி தரிசனம் கனவில் தெரிந்தது
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)இருட்டு அறையில் ஒளி தெரிந்தது.
🗺 Vellore - 😴Dream(Sub-conscious)வள்ளலாரின் சிலை மீசை உள்ளது போலும் இல்லாதது போலும் தெரிந்தது.
🗺 Vellore - 😴Dream(Sub-conscious)Jul 4 2021 - பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கையில் திருவருட்பா புத்தகமும் இருந்தது. பேருந்தில் இருந்த 2 பேர் என்னை பார்த்தார்கள்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Jul 3 2021 - நான் மோட்டார் சைக்கிளில் மதுபான கடைக்கு பயணித்துக்கொண்டிருந்தேன். தவறான வழியில் சென்றதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினேன். நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் டிவிஎஸ் 50 இல் பெரிய ஹாரன் வைத்துக் கொண்டு வந்தார். என்னை பார்த்தவுடன் ஹாரன் அடித்தார். நான் நிமிர்ந்து பார்த்த உடன் சிறிய தெய்வம் ஆன கருப்புராயன் கையில் கத்தி வைத்து கொண்டு வந்தார். அங்கே நிறைய கத்திகள் விலங்குகளை கொள்ள இருந்தது. அதைப் பார்த்தவுடன் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு பயந்து ஓடி விட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)July 1 2021 - நான் பேருந்தில் மூன்று நபர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது திருக்கதவம் திறவாயோ என்ற பாடல் கேட்டது மற்றும் அருட்பெருஞ்ஜோதி என்ற வார்த்தை கேட்டது. அதைக் கேட்டவுடன் பேருந்திலிருந்து இறங்கி விட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம். எங்களை நான்கு முதல் ஐந்து நபர்கள் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து இவர்கள் புலாலை மறுத்தவர்கள் ஆதலால் பலமாக இருப்பார்கள் என்று கூறினார்கள். திடீரென்று இயேசு நாதர் போற்றி என்ற வாக்கியம்கேட்டது . பின்பு அந்த இடம் தேவாலயம் ஆக மாறிவிட்டது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)June 30 2021 - சமையல் அறையில் என்னுடன் இரண்டு நபர்கள் இருந்தார்கள். அங்கே அமர்ந்திருந்த தமிழாசிரியை எங்களைப் பார்த்து யாருக் கெல்லாம் வள்ளலார் தெரியும் என்று கேட்டார். நான் எனது கையை உயர்த்தினேன். பின்பு வள்ளலார் எழுதிய கடிதம் என்னுடன் இருப்பதை சொல்ல நினைத்தேன். பின்பு அவர் பூக்களை இறைவழிபாடு செய்யக் கொடுத்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)June 25 2021 - நானும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பெட்டிக் கடையில் இருந்தோம் .அது என்னுடைய நண்பனின் பழைய வீடு மாதிரி தோன்றிற்று. அங்கே வள்ளலாரின் உருவப்படம் மறைக்க பட்டிருந்தது. இங்கே இருந்தவர்கள் வள்ளலாரை வழிபட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்று நான் நினைத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)June 20 2021 - நான் ஒரு பாடலைப் படித்து கொண்டு இருந்தேன். அந்த பாடல் திருவருட்பா ஐந்தாம் திருமுறையில் இருந்தது போல தோன்றிற்று.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)June 13 2021 - படப்பை பாலகிருஷ்ணன் என்னுடைய நண்பருக்கு வள்ளலார் பிறந்த நாள் அழைப்பிதழை மற்றவர்களுக்கு கொடுக்குமாறு கொடுத்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)