April 8 2021 - நான் எனது அக்கா மற்றும் எனது அம்மா சன்மார்க்க சங்கம் செல்கின்றோம் அது ஒரு மலைப் பகுதியில் இருந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Apr 04 2021 - நான் சத்திய ஞானசபையில் இருந்து கொண்டு மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் என்னும் திருவருட்பா பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பாடலை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டார் . அதற்கு நான் இது திருவருட்பா ஐந்தாம் திருமுறையில் இருக்கும் பாடல்.இதை ஒரு இணைய தளத்திலிருந்து பதிவு செய்து கொண்டேன் என்று கூறினேன். ஒரு பெண் என்னிடம் உணவு கொடுத்தார். என்னை சுற்றி இளைஞர்கள் இருந்தார்கள்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Mar 24 2021 - நான் ஒரு சன்மார்க்க சங்கத்தில் இருந்தேன். எனது அம்மா வள்ளலாரின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார் மற்றும் கண்ணாடியை பார்த்தார் அதிலும் வள்ளலாரின் பாடம் தெரிந்தது. எனது நண்பர் ஒருவர் கருப்பு பலகையில் அருட்பெருஞ்ஜோதி என்று எழுதினார் மற்ற நாள் அருட்சோதி என்று எழுதினார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Mar 23 2021 - யாரோ ஒருவர் என்னிடம் ஞானபிரபந்தன் படத்தைக் கொடுத்தார் . அங்கே ஒரு பெண் இருந்தார் அந்தப் பெண் அவருடைய மனைவி போல் இருந்தது. அந்தப் படத்தில் சில மந்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. நான் நினைத்தேன் , இவர் ஏன் தனது படத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறார் வள்ளலார் கூட தன்னை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ள வில்லையே என்று. அங்கிருந்த ஒருவர் எனது தந்தை குடித்து இருக்கிறார் என்று சொன்னார் . முதலில் அவரை திட்டி விட்டேன். பின்பு வள்ளலார் யாரையும் திட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்று நினைத்து அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Mar 20 2021 - நான் படப்பை சன்மார்க்க சங்கத்தில் இருந்தேன். வள்ளலார் என்னிடம் வைத்த கருணையை எண்ணி அங்கிருந்த ஒருவரிடம் அழுதேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Mar 12 2021 - என்னுடன் சேர்ந்து வேலை செய்பவர் எனது கனவில் வந்தார் அவரிடம் புலால் உண்ணக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தேன். திருக்குறளையும் திருவருட்பாவை பற்றியும் சொன்னேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Mar 9 2021 -நான் கருப்புராயன் கோயிலில் இருந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)May 7 2021 - வள்ளலாரின் இரண்டு படங்கள் தேவாலயத்தில் இருந்தன. ஒரு படத்தில் மீசை வைத்துக் கொண்டிருந்தார். படங்கள் தொங்க பட்டிருந்த இடங்கள் திருத்த வெளி சன்மார்க்க சங்கம் போலிருந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Feb 28 2021 - வள்ளலார் ரோட்டில் நின்று கொண்டிருந்தார் அவரை கட்டிப்பிடிக்க நான் ஓடிச் சென்றேன். நான் அருகில் சென்றதும் வயதானவர் போல் மாறி விட்டார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Feb 25 2021 - எனது நண்பர் ஒருவர் கனவில் தோன்றினார் அவரிடம் உனது தந்தை எங்கே சன்மார்க்க சங்கம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்டேன்.அது எங்கே கஸ்தூரி பாளையத்தில் உள்ளதா என்று கேட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Feb 9 2021 - எனது மாமா மற்றும் அவருடைய நண்பர் எங்களை வள்ளலாரின் விழாவிற்கு அழைத்தார்கள். நான் போக மறுத்து விட்டேன் ஏனென்றால் அவர்கள் தெய்வங்களையும் வழிபடுவார்கள். ஆனால் எனது அம்மா அந்த விழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். நான் அதற்கு வடலூர் செல்லலாம் என்று சொன்னேன். கடிகாரத்தைப் பார்த்தேன் மணி 4pm ஆகியிருந்தது, ஆதலால் வடலூர் செல்ல முடியாது . எனது அம்மாவையும் நான் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நாம் அந்த நிகழ்ச்சிக்கு போகலாம் என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Feb 8 2021 -நான் 4:30am மணிக்கு வள்ளலாரின் உருவப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப்படம் இளம் வயது வள்ளலார் ஆக மாறியது. அந்தப்படம் நான் வழிபாடு செய்ய எனது அறையில் வைத்திருந்த படம். பின்பு எனக்கு எப்போது பேரின்பம் கிடைக்கும் என்று கேட்டேன். பின்பு நான் காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு ஜோதி தரிசனம் காண பேருந்தில் பயணித்தேன் அப்போது மணி 12:00pm.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Jan 14 2021 - நான் ஒரு சன்மார்க்க சங்கத்திற்கு சென்றேன். அங்கே வயதானவர் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Jan 12 2021 - தினமும் வழிபட வைத்திருந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது . வள்ளலாரின் படம் கீழே படுத்தது போல் இருந்தது .அதை நான் எடுத்து வைத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Jan 1 2021 - நான் ஒரு கெட்ட சக்தியின் உருவத்தை பார்த்து பயந்து விட்டேன் .அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று சொல்ல ஆரம்பித்தேன் இது எனது வீட்டில் நடந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Dec 25 2020 -எவ்வுயிரும் தம்முயிர் என்ற திருவருட்பா வரி எனது கனவில் வந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Dec 19 2020 -நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். சன்மார்க்க சங்கத்திற்கு சென்று அதை ஒரு புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்று எண்ணினேன். திடீரென்று வள்ளலாரின் புகைப்படம் தெரிந்தது .அதை பார்த்தவுடன் அதன் அருகில் நான் சென்றேன். அதில் சன்மார்க்க சங்கம் செல்லும் வழி என்று இருந்தது அந்த வழியே நான் பின்தொடர்ந்தேன். அந்த வழியை பின்தொடர்ந்து சன்மார்க்க சங்கத்தை அடைந்தேன். அங்கு வள்ளலாரின் சிலை இருந்தது .அங்கே இருந்த வழிபாட்டு அறை வெறிச்சோடி இருந்தது. விநாயகரின் சிலையும் இருந்தது அதை நான் எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன் அந்த சங்கம் துளசி என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)Dec 30 2020 - ஒரு கெட்ட சக்திக்கும் விநாயகருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்த சக்தியை வைத்துக்கொண்டே விநாயகரால் அந்த கெட்ட சக்தியை சமாளிக்க முடியவில்லை. பின்பு தனது சக்தியை அதிகப்படுத்தினார். சக்தி பெரிதாக பெரிதாக விநாயகரும் பெரிதாகிக் கொண்டே இருந்தார் பின்பு வெடித்து விட்டார் .அந்த வெடிப்பில் இருந்து வள்ளலார் தோன்றினார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)17 oct 2020 - படப்பை சன்மார்க்க சங்கம் கனவில் வந்தது. அங்கே இருந்த மக்கள் அன்னதானத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்,
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)10 Oct 2020 - வள்ளலாரின் புகைப்படம் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்தது .அங்கே நிறைய மக்கள் பசியுடன் இருந்தார்கள்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)