📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience 😇 (Conscious) : 16📜
👨‍🎤 ஜோதி மைந்தன்
⏳ 4 months, 1 week ago

எமது வாழ்க்கையில் உணர்வு பூர்வமாக வள்ளல் பெருமான் வழிகாட்டி வந்தாலும் நேரடி அனுபவத்தை இங்கு எடுத்து கூறுவது இந்தகட்டுரைக்கு நல்ல சாட்சியமாக அமையும் என்பதால் இரண்டு நிகழ்வு களை இங்கு சுட்டி காட்டுகிறோம். இராணிப்பேட்டையில் ஞானசபை கட்டியபோது கீழ்தளம் அமைத்து அந்த தளம் அமைக்க ஏதுவாக பீடம் சுற்றி மணல் கொட்டப்பட்டிருந்தது.24.06.1998 அன்று அந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது ,பீடத்தருகே சென்ற நல்லதொரு சமுக சேவகராக இராணிப்பேட்டையில் திகழ்ந்துவரும் கஜேந்திரன் என்ற அன்பருக்கு வள்ளல் பெருமான் சில கணங்கள் தமது ஞானதேகத்தை காட்டி மறைந்தார். அதன் காரணமாக அந்த அன்பர் ஒரு நாழிகைநேரம் உணர்ச்சி மேலிட்டில் தத்தளித்தார். நல்ல மனிதர் சேவை குணம் கொண்ட பண்பாளர் என்பதால்,எம்மைவெளிப்படுத்தினோம் என வள்ளல் பெருமான் எம்மிடம் கூறினார். அடுத்ததாக திருமாளிகை கோபுரத்தின் உச்சியில் 10.08.1999 அன்று முதல் ஜோதி ஏற்றப் பட்டது. அது சமயம் வந்திருந்த அன்பர்கள் ஜோதியை தரிசனம் செய்ய கோபுரம் மேலேயே ஏறிவந்து வணங்கிவிட்டுச் சென்றார்கள். அடுத்து இரண்டாவதுஜோதி 07.09.1999 அன்று பூசதினத்தன்று ஏற்ற முற்படும்போது வள்ளல் பெருமான் எம்மிடம், “தங்களைத் தவிர யாரும் மேலே வரவேண்டாம் என அறிவித்து விடுங்கள்,அனைவரும் கீழிருந்தே ஜோதி தரிசனம் செய்யட்டும்” என்று கூறினார். அதன்படி யாமும் அன்பர்களுக்கு,”யாரும் எம்மை பின் தொடர வேண்டாம்” என அறிவித்து விட்டு, கீழே உள்ள ஜோதியிலிருந்து கற்பூரம் ஏற்றி எடுத்துக் கொண்டு மகாமந்திரம் கூறிக்கொண்டே கோபுரத்தின் மேல் நோக்கி படியேறினோம். அதுசமயம் வெண்மையான ஆடையுடன் வெளீவாயிலிலிருந்து ஒரு மனிதர் சுமார் 5அடி இடைவெளியில் பின்தொடர்ந்தார். யாம் இதை அறிந்து,வள்ளல் பெருமான் உணர்த்தியும்,இவர் பின்தொடர்கிறாரே,இவர் வெளியிலிருந்து வருகிறார் எனவே நமது அறிவிப்பு இவருக்கு தெரிந்திருக்காது,நாம்தான் மந்திரம் கூறிகொண்டு செல்கிறோம் மற்றவர்களாவது எடுத்துக் கூறலாமே என மனதில் வருந்தி மந்திரத்தை நிறுத்தாமலேயே மேலே சென்று, படிநிலை கோபுரத்தை வலம் வந்து மெலெ சென்று தீபம் ஏற்றினோம். வந்தவர் கோபுரத்தில் ஈசான்ய மூலையில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார். யாம் தீபமேற்றி மகாமந்திரத்தை தொடர்ந்து ஜோதிப்பாடல் பாடி ஆராதனை செய்து தீபாராதனை தட்டை எடுத்து கீழிறங்கிக் கொண்டே அந்த மனிதரிடம்,”ஐயா கட்டளையை கூறியும் மேலே வந்திருக்கிறீர்களே” என்று வருத்தப்பட்டு கூறிக்கொண்டு அவரது காலிலிருந்து தொடங்கி முகத்தை பார்க்க முயற்சிக்கையில் அந்த மனிதர் மறைந்து போனார். யாம் விதிர்த்து உணர்ச்சி மேலிட்டு படிக்கட்டு இருக்கும் இடம்கூட தெரியாமல் கலங்கி, சிறிதுநேரம் அமர்ந்து ,வந்தது வள்ளல் பெருமான் என உணர்ந்து, கீழே வந்து அனைவரிடமும் கூறி ஸ்தூல தேகமே காற்றில் கரைந்ததை கூறி ஞானதேகத்தின் பெருமையை எடுத்தியம்பி அனைவரும் ஆனந்தம் அடைந்தோம். முழு ஈடுபாட்டுடன் வள்ளல் பெருமான் வழி நின்றால் கண்டிப்பாக வாழ்கின்ற வள்ளல் பெருமானை தரிசிக்கலாம் என்பது எங்களது அனுபவ உண்மை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம். (இந்த அனுபவ வெளிப்பாட்டு கட்டுரை சென்னையிலிருந்து வெளியாகும் “தீபச்சுடர்” மாத இதழில் (ஆகஸ்டு 2009) வெளியிடப்பட்டது) -வெளிப்பாடு தொடரும் என்றென்றும் சன்மார்க்க பணியில், ஜோதிமைந்தன் சோ. பழநி

🗺 ராணிப்பேட்டை - 😇Real(Conscious)
👨‍🎤 பிரபா
⏳ 5 months, 2 weeks ago

விளக்கு ஏற்றி தியானம் செய்து கொண்டு இருந்தேன்.சிறிது நேரம் கழித்து விளக்கில் உள்ள ஜோதி சிறிது சிறிதாக மாறி கடைசியில் வள்ளலார் தோற்றமாக மாறியது.

🗺 Paramathi velur - 😇Real(Conscious)
👨‍🎤 அஜய்
⏳ 5 months, 4 weeks ago

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விளக்கு தியானம் செய்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க கண்களை மூடிய சிறிது நேரத்தில் நெற்றியில் அழுத்தம் ஏற்பட்டது, பின் காதுகள் அடைத்தன, ஓம் என்ற மந்திரமும் பின் இறைவன் பற்றிய பாடல்கள் கேட்டது, பின் சிறிய வெள்ளை நிற ஒளி மத்தியில் தெரிந்து பின் விழித்து கொண்டேன்

🗺 ஞான மலை - 😇Real(Conscious)
👨‍🎤 APJ
⏳ 6 months ago

one day I cried to see arutperumjothi andavar and that day I had a strong vibration at puruvamathi and I closed my eyes and arutperumjothi came. After that whenever I think of it, it came. But it use to be so silent. As vallalar said after seeing apj I didn't experience any hard time in life after that and my eyes didn't get harm at the same time. Arutperumjothi thaniperumkarunai

🗺 Tamilnadu, Madurai. - 😇Real(Conscious)
👨‍🎤 venkateswari anbalagan
⏳ 6 months ago

விளக்கு தியானம் செய்து கொண்டிருந்த போது தீபத்தில் வள்ளலாரை தொடர்ந்து இரண்டாவது நாளும் கண்டேன்.

🗺 Chennai - 😇Real(Conscious)
👨‍🎤 Ragu Aru
⏳ 6 months ago

பரந்து பட்டதாக இருந்தது. லேசான உணர்வில் அவரும் நானும் ஒன்றாக இருப்பதாகவே உணர்ந்தேன். தங்களுக்கும் எனக்கும் எந்த வேற்றுமையும் இல்லை

🗺 Vedaraniam - 😇Real(Conscious)
👨‍🎤 பார்த்தீபன்
⏳ 6 months ago

விளக்கு தியானம்(திராடக பயிற்சி)செய்து கொண்டிருந்த போது தீபத்தில் வள்ளலாரை தொடர்ந்து இரண்டாவது நாளும் கண்டேன்.

🗺 கடலூர் - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

நான் காலை 5:01 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலை எனது மொபைலில் கேட்டுக் கொண்டிருந்தேன் .அப்போது திடீரென்று எனது புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றியது பின்னர் இரு காதுகளும் அடைத்து விட்டனர். பின்பு நான் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்ல எனது வாயை திறந்தேன். அப்போது காதுகளில் அடைக்கப்பட்டிருந்த காற்று எனது வாயின் வழியாக வெளியேறிவிட்டது.பின்பு ஒளியும் மறைந்துவிட்டது.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

June 6 2021 7:28am -முதலில் எனது இரண்டு செவிகளும் திடீரென கும்மென அடைக்க தொடங்கியது . பின்பு திடீரென்று நான் எனது புருவமத்தியை பார்க்க தொடங்கினேன் அங்கே துடிப்பு ஏற்பட்டது . பின்பு புருவமத்தியில் ஒளி தெரிய ஆரம்பித்தது. பின்பு ஜோதி ஜோதி ஜோதி சுயம் என்ற பாடல் இடது செவியில் முழுமையாக கேட்டது. அந்த ஒளியை பார்க்க பார்க்க எனது இரண்டு கண்களிலும் அழ வேண்டும் என நினைத்தேன்.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

Feb 7 2021 காலை 9am மணி அளவில் எனது இரு செவிகளும் அடித்துக்கொண்டது.மூன்று முதல் நான்கு முறை அதே மாதிரி அடைத்தது. புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றியது. அந்த ஓளியை பார்த்தவுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

Jan 14 2021 -எனது செவிகள் அடித்துக்கொண்டது. புருவ மத்தியில் ஒளி தெரிந்தது. அதைப்பார்த்த உடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

Dec 1 2020 -3:00pm மணியளவில் வள்ளலார் நிற்கும் உருவம் எனது புருவ மத்தியில் தோன்றிற்று.பின்பு எனது செவிகள் அடைத்தது. பின்பு ஒரு நாதம் கேட்டது.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

25 Jul 2020 -எனது புருவ மத்தியில் ஒளி தோன்றிற்று .பின்பு புருவமத்தி வெப்பமாக தொடங்கியது. பின்பு நான் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

20-Jul-2020 - காலை 12:20am மணி அளவில் எனது புருவ மத்தியில் ஒளி தோன்றிற்று. பின்பு யார் என்று தெரிகிறதா பார்த்துக்கொள் என்ற ஒரு குரல் கேட்டது. குரலுடன் ஒரு நாதம் கேட்டது. அதைப்பார்த்த உடன் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னேன்.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

நான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒளி தோன்றியது.அந்த ஒளியே பார்த்தவுடன் எனது ஆன்மா உடலை விட்டு பிரிந்து அந்த ஒளி இடம் சென்றது. பின்பு மறுபடியும் ஆன்மா எனது உடம்புக்குள் சென்றுவிட்டது.

🗺 Coimbatore - 😇Real(Conscious)
👨‍🎤 Arun Prakash
⏳ 6 months ago

எனது அறையில் ஒளி தோன்றியது.அந்த ஒளியே பார்த்தவுடன் எனது ஆன்மா உடலை விட்டு பிரிந்து அந்த ஒளி இடம் சென்றது. பின்பு மறுபடியும் ஆன்மா எனது உடம்புக்குள் சென்றுவிட்டது

🗺 Coimbatore - 😇Real(Conscious)