வரவேற்பு மாலை அறிமுகம் !


வரவேற்பு மாலை எவ்வாறு எழுதப்பட்டது ?

முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன் . அப்போது தான் வரவேற்பு மாலை எவ்வாறு எழுதப்பட்டது என்பது புரியும்.

நான் 2019 ஆம் ஆண்டில் இருந்து சிதம்பரம் இராமலிங்கம் கூறிய சுத்த சன்மார்க்க நெறியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு பயணிக்க தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு வள்ளலார் முதன் முதலில் எனது கனவில் காட்சி தந்தார். அந்தக் கனவு பின்வருமாறு..

கனவு - வள்ளலார்

வள்ளலார் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் எனக்கு உடம்பு சோர்வு மற்றும் சளித்தொல்லை உள்ளது என்று சொன்னேன்.அதற்கு வள்ளலார் மருத்துவரிடம் செல் என்றார். அதற்கு நான், நீங்கள் இருக்கும் போது நான் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்? என்று கேட்டேன். பின்பு திடீரென்று சித்தி வளாகத்தில் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்த அறையில் உள்ள கதவு தெரிந்தது, பின்பு ஒரு மூலிகை தெரிந்தது ,பின்பு ஒரு நீல நிற போர்டில் அந்த மூலிகையின் பெயர் எழுதி இருந்தது.

வருடம் - 2019

இவ்வாறு வாழ்க்கையில் நான் சென்று கொண்டிருக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருந்தது. ஆனால் அந்த வேலை ஒரு வெளிநாட்டில் கிடைத்திருந்தது. அந்தப் பணிக்கு நான் சென்றால் வடலூர் செல்ல முடியாது. மேலும் நான் 2024 ஆம் ஆண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டும் வள்ளலாரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன். இப்படி காத்துக் கொண்டு இருக்க எனக்கு ஒரே குழப்பம் , சிதம்பரம் இராமலிங்கம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார்களா இல்லையா என்று. சரி ! இந்த குழப்பத்தை நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் வள்ளலாரிடம் கேட்போம் என்று சில நாட்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது , டிசம்பர் 12 2021ஆம் ஆண்டு அதற்கான பதில் ஒரு கனவு மூலமாக வெளிபட்டது. அந்தக் கனவு பின்வருமாறு.

கனவு - வள்ளலார்

நான் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன் திடீரென்று வெள்ளை நிறத்தில் ஒரு ஜோதி தோன்றியது. நான் அந்த ஜோதியே பார்த்தவுடன் அந்த ஜோதி குல் குதித்துவிட்டேன். அப்போது ஒரு வீடு தோன்றிற்று. அந்த வீட்டில் ஒருவர் உபதேசம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் நிறைய மனிதர்கள் அமர்ந்து இருந்தார்கள். நான் அங்கு நின்று கொண்டு அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.முதலில் அவர் வள்ளலார் கூப்டா தான் வருவாரு இல்லாட்டி வெளியே நின்று வேடிக்கை தான் பார்ப்பார் என்று கூறினார்.பின்பு திடீரென்று அவர் கிழக்கு வெளுத்தது அருள்ஜோதி உதயம் என்ற ஒரு பாடலை பாடினார். பின்பு அங்கு இருந்தவர்கள் எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார் ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறார்! என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். எனக்கும் கண்களில் கண்ணீர் வந்தது.பின்பு கனவு கலைந்து எழுந்து விட்டேன். பின்பு நான் திருவருட்பாவில் கனவில் அவர் பாடியவரிகள் இருக்கிறதா என்று பார்த்தேன். என்ன ஒரு அதிசயம் அந்தப்பாடல் திருவருட்பாவில் இருந்தது ! அந்தப் பாடல் வரிகள் "கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் ! கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே"

12.12.2021

இந்தக் கனவு வந்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியுடன் சில மாதங்கள் சென்றது. இவ்வாறு சென்று கொண்டு இருக்க !

கனவு - பாபாஜி

மகா அவதார் பாபாஜி ரஜினிகாந்தை போல் காட்சி அளித்தார். பின்பு அவர் நானே உள்ளொளியை 30 சதவீதம் தான் பார்த்துள்ளேன். இன்னும் முழுதாக பார்க்க ஆண்டவரின் அருள் வேண்டும் என்று சொன்னார்.

28.03.2022

இந்தக் கனவு வந்தவுடன் எனக்கு மகா அவதார் பாபாஜி பற்றிய அறிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் அவரைப் பற்றி முதல் முதலில் வெளிவந்த "ஒரு யோகியின் சுயசரிதம்" என்ற புத்தகத்தை படித்தேன். மேலும் மகா அவதார் பாபாஜி தொடர்புடைய கனவுகள் வந்த வண்ணம் இருந்தது. அந்தக் கனவுகள் பின் வருமாறு.

கனவு - பாபாஜி

April 2 2022: ஒரு குகை இருந்தது .அங்கே நிறைய யோகிகள் இருந்தார்கள்.அதில் திடீரென்று ஒருவர் மறைந்து விட்டார்.நான் அந்த குகையின் சுவரை கைகளால் தொட்டேன்.

April 28 2022: நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு மொபைலில் வீடியோ கால் செய்து கொண்டிருந்தேன்.பின்பு நான் அவனிடம் நீ ஏன் உன்னுடைய திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.பின்பு அதை நான் ஒருவரிடம் சொன்னேன். அதற்கு எனது நண்பர் அவசரத்தில் அழைக்க மரப்பது இயல்புதான் என்றார். நான் திடீரென்று ஒரு பெண்ணை பார்த்தேன் . அந்தப் பெண்ணை பார்த்தவுடன் பரமஹம்சா யோகானந்தா என்னை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தார்.

May 2 2022: நான் கல்லூரியில் இருந்தேன் திடீரென்று ஒரு சித்தர் காட்சியளித்தார். பின்பு ஒரு அழகான பெண் என்னை நோக்கி வந்தார்கள் .நான் நினைத்தேன் இந்த பெண் அந்த சித்தரிடம் இருந்து வந்தவர் என்று. பின்பு அந்தப் பெண் வாசியோகத்தை பற்றி என்னிடம் பேசினார்கள். அந்தப் பெண்ணிடம் நான் வள்ளலாரை பின்பற்றுபவன் என்று சொன்னேன் .அதற்கு அந்தப் பெண் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று கூறினார் !பின்பு திடீரென்று எனக்கொரு உணர்வு தோன்றியது இந்த பெண் மாதாஜியாக இருப்பார்கள் என்று.

குறிப்பு: மேல் உள்ள கனவே ஆராய்ந்து பார்த்தால் , மகாவதார் பாபாஜி என்னை வாசி யோகத்தில் புகுத்த முயற்சி செய்துள்ளார். இருப்பினும் நான் வள்ளலாரை பின்பற்றுபவன் வாசி யோகம் செய்ய மாட்டேன் என்று உறுதியோடு இருந்தேன்.

July 3 2022: ஒரு நாற்காலியில் மகா அவதார் பாபாஜியின் உருவப்படம் இருந்தது . நிறைய மனிதர்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். திடீரென்று ஒருவர் முக்த்தியை பற்றியும் பின்பு நமது குரு அருட்பெருஞ்ஜோதி என்று கூறினார் . எனது புருவ மத்தியில் துடிப்பு ஏற்பட்டது .எனது செவிகள் அடைந்துவிட்டது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே பார்ப்பேன் என்று நினைத்தேன்.ஆனால் அவர் காட்சியளிக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் ,எனக்கு இவரின் மகளை திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கூறினார். அப்படி கூறினவுடன் நான் அந்த பெண்ணிடம் இருந்து விளங்கி விட்டேன் .திடீரென்று ஒருவர் உனக்கு அருட்பெருஞ்ஜோதி மற்றும் வள்ளலார் மட்டும்தான் வேணுமா என்று கேட்டார்.

July 16 2022: நான் ஒரு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன்.அங்கே பரமஹம்சா யோகானந்தரின் புகைப்படம் பொருந்திய ஒரு புத்தகம் தெரிந்தது .அந்த புத்தகத்தில் பரமஹம்சா யோகானந்தரின் வலது கண்ணில் இருந்து ஒரு வெள்ளை ஒளி அவரின் புருவ மத்திக்குச்சென்றது.

August 20 2022: மகா அவதார் பாபாஜி ரஜினிகாந்தை போல் இருந்தார். திடீரென்று ஒருவர் ஆசையே மாயை மாயையே ஆசை என்று கூறினார். பின்பு நான் அந்த நபரிடம் வள்ளலாரை பற்றி பேச ஆரம்பித்தேன். பின்பு நாம் ஏன் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். வள்ளலார் நேரடியாகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே பார்க்கலாம் என்று கூறியுள்ளார் என்று கூறினேன்.

குறிப்பு: மேலுள்ள கனவில் நான் தெளிவாக கூறுகிறேன் . வள்ளலார் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரடியாகவே பார்க்கலாம் என்று கூறியுள்ளார் . எதற்காக வாசி யோகம் செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

செப்டம்பர் 7 2022 ஆம் ஆண்டு வந்த கனவில் "நான் மகா அவதார் பாபாஜி உடைய" என்று குரல் கேட்டது. அந்த கனவை ஆராயத் தொடங்கினேன். அப்போது "The Voice of babaji" என்ற புத்தகத்தை பற்றி அறிந்தேன்.அதை படிக்கத் தொடங்கினேன். அந்த புத்தகத்தில் சிதம்பரம் இராமலிங்கம் பற்றி பாபாஜி கூறியிருப்பார். அதைப் படித்தவுடன் மிகவும் மகிழ்ந்தேன். இருப்பினும் ஒரு இடத்தில் ராமையா ( சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்) பாபாஜி உடன் சேர்ந்து வேலை செய்வது வள்ளலாருக்கு பிடிக்கவில்லை என்று பாபாஜி கூறுவார். அந்த வாக்கியம் பின்வருமாறு.

இதை படித்தவுடன் எனக்கு மனதில் ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.ஒரு இடத்தில் பாபாஜி நீலகண்டனிடம் நீ முட்டையை சாப்பிடு என்று கூறுவார். அந்த வாக்கியம் பின்வருமாறு.

இதை படித்தவுடன் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டது. இதுவரையும் நான் பாபாஜியை ஒரு சுத்த சன்மார்க்கி என்று நம்பிக் கொண்டிருந்தேன். வள்ளலார் கூறுவார் "சாகாதவனே சன்மார்க்கி " என்று. நானும் பாபாஜி சாகா வரம் பெற்றுள்ளார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். பின்பு தான் தெரிந்தது பாபாஜி பஸ்பத்தை சாப்பிட்டு நீண்ட காலம் வாழ்ந்து கொண்டுள்ளார் என்று.

மேலும் அந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன். அதில் பல இடத்தில் பாபாஜி தனது சித்துக்கள் வேலை செய்யவில்லை என்று கடும் தவத்திற்கு தான் செல்லப் போவதாக கூறுவார். பாபாஜி ஒரு அச்சகத்தை அமைக்க நீலகண்டனிடம் கூறியிருப்பார். ஆனால் அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்தும் அந்த அச்சகத்தை நிறுவ இயலாது . இதை நீலகண்டன் பாபாஜி இடம் தெரிவிப்பார். அதற்கு பாபாஜி அதைக் கேட்டு, நான் தவத்திற்கு சென்றாக வேண்டும் அப்போது தான் அந்த காரியம் முடிவடையும் என்று கூறி தவத்திற்கு செல்வார். பாபாஜி கூறிய வாக்கியம் பின்வருமாறு.

இதை படித்தவுடன் மேலும் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது இறையருள் பெற்றவர் ஏன் திரும்பத் திரும்ப தன் சித்தியை பயன்படுத்த கடும் தவத்திற்கு செல்ல வேண்டும் என்று ?

மேலும் 1952இல் ஒரு முன்னணி பத்திரிக்கையில் பாபாஜி பற்றிய புத்தகங்களை விமர்சித்தும் பாபாஜியை விமர்சித்து பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது என்பதையும் அறிக. இந்த வேலையை யார் செய்திருப்பார்கள் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அந்த வாக்கியம் பின்வருமாறு.

இந்த புத்தகத்தை தொடர்ந்து , THE HOLY SCIENCE, THE BABAJI AND THE 18 SIDDHAS , போன்ற புத்தகங்களை படித்தேன். அப்போது பாபாஜி ஒரு சுத்த சன்மார்க்கி இல்லை என்பதை உணர்ந்தேன். இவ்வாறு இருக்க , பாபாஜி தொடர்பான கனவுகள் வந்த வண்ணம் இருந்தது. அந்தக் கனவுகள் பின் வருமாறு.

கனவு - பாபாஜி

September 15 2022: நான் ஒரு இடத்தில் இருந்தேன் .அங்கே மகா அவதார் பாபாஜி உடைய சீடர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் சன்னியாசியாக இருந்தார்கள். அவர்களிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்ட பின் சன்னியாசி ஆனீர்களா இல்லை அதற்கு முன்பே ஆகி விட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் திருமணத்திற்கு முன்பே நாங்கள் சன்னியாசி ஆகிவிட்டோம் என்றார்கள். பின்பு நான் திருவருட்பா புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். பின்பு ஒரு சன்னியாசி நான் என்ன படிக்கிறேன் என்று அந்த புத்தகத்தை உற்று நோக்கிக் கொண்டு இருந்தார்.

October 20 2022: என்னுடைய நண்பருடன் ஒரு சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்தேன். அங்கே உள்ள மக்களெல்லாம் இஸ்லாமியர்களாக இருந்தார்கள் .பின்பு அங்கே ஒரு வீடு இருந்தது . ஒரு ஆணும் பெண்ணும் அங்கே இருந்த வீட்டின் மாடி யிலிருந்து இறங்கினார்கள் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் நான் தலை குனிந்து விட்டேன்.பின்பு மகா அவதார் பாபாஜி உடைய புகை படங்கள் தோன்றின.

October 28 2022: நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்தேன். அங்கே saint guru nanak புகைப்படம் இருந்தது. பின்பு அங்கிருந்த நபரிடம் ஒரு ஆன்மீக புத்தகம் இருந்தது. அதை ஹிந்தி மொழியில் எழுதியிருந்தது. எங்கிருந்தா ஒருவர் ,அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் YSS (yogananda satsang society) applicationஐ கொடுத்தார் .என்னிடமும் கொடுக்க வந்தார் அப்போது நான் முன்பே YSS யில் சேர்ந்து விட்டேன் என்று கூறினேன். பின்பு யாரோ ஒருவர் நீ அந்த மண்டீருக்கு(mandir) செல் என்றார்.அதற்கு நான் already தாம்பரம் குருத்துவாராவிற்கு சென்று உள்ளேன் என்று கூறினேன்.

November 14 2022: பாபா திரைப்படம் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டிருந்தது. அப்போது நான் மகா அவதார் பாபாஜியை நினைத்தேன்.பின்பு அந்த தொலைக்காட்சியில் ஜோதி என்ற வார்த்தை தோன்றியது. பின்பு நான் வள்ளலாரை நினைத்தேன்.

December 1 2022: நான் மகா அவதார் பாபாஜி உடன் ஆங்கிலத்தில் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தேன்:
Me: If you use your super powers , then you need to go to tapas ? right
Babaji: Yes
Me: I learned this from the book " The Voice of babaji"
Babaji: Oh
Me: Then i was telling something to him and finally telling you are siddhar right so you know that.I think i spoke about arutperumjothi and for that babaji replied something and then i tried to search video of my friend who has youtube channel related to vallalar and show the video about vallalar to babaji and suddenly he got disapperead.

December 17 2022: பரமஹம்சா யோகானந்தா மற்றும் யுத்தேஸ்வர் கிரியின் புகைப்படம் கனவில் தோன்றியது !

இவ்வாறு கனவுகள் வந்த வண்ணம் இருக்க டிசம்பர் 29 2022ஆம் ஆண்டு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. பாபாஜி தன்னுடைய சீடர்களை சுத்த சன்மார்க்க நெறிக்கு வரவழைப்பதற்கு என்னுடைய உதவியை நாடுகிறார் என்று நினைத்தேன். சரி ! எவ்வாறு பாபாஜி உடைய சீடர்களை சுத்த சன்மார்க்க நெறிக்கு வரவழைப்பது என்று யோசித்தேன். மேலும் எவ்வாறு வள்ளலார் உடைய சீடர்களை பாபாஜி இடம் சேர்ப்பது என்று நினைத்தேன்.

இவர்களை இனிக்க "The Voice of Babaji" என்ற புத்தகத்தில் பாபாஜி வள்ளலார் பற்றிய பேசியதை, சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும் கிரியா யோகா அன்பர்களுக்கும் தெரியப்படுத்தினால் இணைந்து விடுவார்கள் என்று நினைத்தேன். "The Voice of Babaji" புத்தகத்தில் பாபாஜி வள்ளலார் பற்றி பேசியதை இணையத்தில் வெளியிட அதற்கான அனுமதிக்காக அந்த புத்தகத்தை வெளியிட்ட "BABAJI'S KRIYA YOGA ORDER OF ACHARYAS" என்ற அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கான அனுமதியும் அந்த அமைப்பில் President கோவிந்தன் அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் கோவிந்தன் அவர்கள் வள்ளலார் சில யோக முறைகளை "The foot steps of Saint Ramalingam" என்ற புத்தகத்தை எழுதிய கமலக்கண்ணன் அவர்களுக்கு போதித்தார் என்று, யோக நெறியை உயர்த்தி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

வள்ளலார் யோகத்தை போதித்தார் என்ற அவர் கூறியவுடன் எனது மனம் ஏற்கவில்லை. அதனால் கோவிந்தனுக்கு மேலும் ஒரு மின்னஞ்சல் பின்வருமாறு அனுப்பினேன்.

நான் அனுப்பிய மின்னஞ்சல் - President கோவிந்தன் அவர்களுக்கு

" The footsteps of Saint Ramalingam" என்ற புத்தகத்தை படித்துள்ளேன். அந்த புத்தகத்தில் அட்டை படத்தில் வள்ளலார் உடைய புகைப்படத்திற்கு விபூதி அணிந்துள்ளார்கள். இவற்றையெல்லாம் இளம் சன்மார்க்க அன்பர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் "The voice of babaji " இந்த புத்தகத்தில் பாபாஜி மான் தோல் மேல் அமர்வது, நீலகண்டனிடம் முட்டையை உன்ன சொல்வது, இவையெல்லாம் ஜீவகாருண்யத்திற்கு எதிரானது இவற்றையும் சுத்த சன்மாரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இருப்பினும் என்னுடைய குறிக்கோள் பாபாஜி மற்றும் வள்ளலார் உடைய சீடர்களை இணைப்பது. மேலும் பாபாஜி உடைய சீடர்களையும் சுத்த சன்மார்க்க நெறிக்கு வர வைப்பது. அதனால் இந்த செய்தியை நான் இணையத்தில் வெளியிட மாட்டேன் என்று கோவிந்தனுக்கு ஒரு உறுதிமொழி கொடுத்து மின்னஞ்சலை அனுப்பினேன். அந்த மின்னஞ்சலுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை "

BABAJI'S KRIYA YOGA ORDER OF ACHARYAS

கனவு - பாபாஜி

நான் பாபாஜி ஆசிரமத்தில் இருந்தது போல் உணர்ந்தேன். அங்கே வள்ளலார் உடைய சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் வந்து கிரியா யோகத்தை அவர்களுக்கு போதிக்க ஆரம்பித்தார். போதித்துக் கொண்டிருக்கும் போது, வள்ளலார் நிறைய தவறுகள் செய்துள்ளார் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் , நீங்கள் 'The voice of babaji' என்ற புத்தகத்தை படித்து உள்ளீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று கூறினார் . பின்பு நான் அந்த புத்தகத்தில் பாபாஜி தன்னுடைய சீடரான நீலகண்டனுக்கு முட்டையை உண்ணுமாறு சொல்லி உள்ளார் என்று கூறினேன் . இதை கேட்டவுடன் வள்ளலாரின் சீடர்கள் அந்த இடத்தை விட்டு எழுந்தார்கள். பின்பு நான் வள்ளலார் உடைய சீடர்களிடம், வள்ளலார் கூறியது போல் ஒரு ஜாம நேரம் ஆண்டவரை நினைத்தால் அவரைப் பார்த்து விடலாம் என்று கூறினேன். அதற்கு வள்ளலாரின் சீடர்கள் சரி என்று சொன்னார்கள். இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது , அச்சச்சோ ! நாம் கோவிந்தன் இடம் இந்த முட்டை விஷயத்தை வள்ளலாரின் சீடர்களுக்கு சொல்ல மாட்டோம் என்று மின்னஞ்சல் அனுப்பினோமே , சொல்லி விட்டோமே , சரி ! இளம் சன்மாரிகள் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் இதை நாம் கோவிந்தனுக்கு ஒரு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்து விடலாம் என்று கனவிலேயே நினைத்தேன். நான் அந்த ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றேன் . சென்றவுடன் ஒரு கருப்பு நிற காளை மாடு என்னை துரத்த ஆரம்பித்தது. அது என்னிடம் 'come on , come on' என்று அழைத்தது பின்பு, அது கற்களை எடுத்து என் மேல் எரிந்தது.

01.01.2023

இந்தக் கனவு வந்து 25 நாட்கள் கழித்து , ஜனவரி 25 2023 அன்று நான் பைக்கில் இருந்து கீழே விழுந்தேன். கீழே விழும்போது அருட்பெருஞ்ஜோதி என்றே சொல்லிக் கொண்டு விழுந்தேன். கை மட்டும் கால்களில் சில காயங்கள் ஏற்பட்டன. பின்பு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி செய்து கொண்டு வீடு திரும்பினேன். எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டது . இந்த விபத்தை பாபாஜி செய்திருப்பாரோ என்று. இதை தெளிவுபடுத்த என்னுடைய நெருங்கிய சுத்த சன்மார்க்க நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர் பாபாஜி எல்லாம் அவ்வாறு செய்ய மாட்டார் என்று கூறினார். இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இவ்வாறு இருக்க ஜனவரி 30 2023 அன்று ஒரு கனவு வந்தது.அந்தக் கனவு பின்வருமாறு.

கனவு - போகர்

நான் அன்று இரவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வருகை தினத்தை எனக்கு அறிவிக்குமாறு ஆண்டவரிடம் செய்து கொண்டே தூங்கி விட்டேன். அப்போது 11:40PM ஒரு கனவு வந்தது. அதில் என்னுடைய புருவ மத்தியில் துடிப்பு ஏற்பட்டது. நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வருகை தினத்தை அறிந்து கொள்வேன் என்று நினைத்தேன். திடீரென்று யாரோ ஒருவர் ஆண்டவரின் வருகை தினத்தை எனக்கு அறிவிக்காத படி தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். யார் அவர் என்று பார்த்தால் போகர்

26.10.2022

இதனால் எனக்கு போகர் மேல் ஒரு சந்தேகம் வந்தது. நான் போகர் எழுதிய "போகர் 7000" என்ற நூலை படிக்க ஆரம்பித்தேன். அந்த நூலை படிக்க ஆரம்பித்து வெறும் 30 நிமிடங்களில் அசுத்த மாயா சித்தர்கள் பற்றியும் , போகரும் ஒரு அசுத்த மாயா சித்தர் என்பதை அறியப்பெற்றேன்.

மேலும் நான் பாபாஜி பற்றிய படித்த புத்தகங்களை வள்ளலார் கூறிய கலி புருஷன் பற்றிய குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். அப்போது பாபாஜி தான் அந்த கலி புருஷன் என்ற உண்மை புலப்பட்டது. இதை உறுதி செய்ய நான் வள்ளலாரிடமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமும் கேட்டேன்.

பிப்ரவரி 16 2023, 5:20AM இல் வந்த கனவு மூலமாக பாபாஜி தான் கலிபுருஷன் என்ற உண்மையை உணரப்பெற்றேன். அந்தக் கனவு பின்வருமாறு.

கனவு - வள்ளலார்

எனக்கு கனவில் திருவருட்பா புத்தகம் தெரிந்தது , அந்த புத்தகத்தில் வள்ளலார் கையெழுத்தால் எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. அதில் அன்புள்ள சுத்த தேக , ஒளி தேக அன்பர்களே என்று எழுதியிருந்தது.அந்த கடிதத்தில் நிறைய எழுத்துக்கள் அளிக்கப்பட்டு இருந்தது அதனால் முழுதாக என்ன எழுதி இருந்தது என்று தெரியவில்லை.உத்தம சிதம்பரத்தில் யாரும் Activate ஆகவில்லை அதனால் வள்ளலார் 2022க்கு அப்புறம் அவரை டைரக்டாக Activate ஆகப் போறார் என்று ஒரு குரல் கேட்டது.

பின்பு அங்கு ஒரு சன்மார்க்கி நின்று கொண்டிருந்தார் ,அவரிடம் உங்களுக்கு கலிபுருஷன் யார் என்று தெரியுமா என்று கேட்டேன் . நாங்கள் கலிபுருஷன் யார் என்று கண்டுபிடித்து விட்டோம் என்று கூறினேன். பின்பு அந்த சன்மார்க்கி யார் அந்த கலிபுருஷன் என்று கேட்டார். திடீரென்று பாபா திரைப்படத்தில் நடித்த நம்பியார் அங்கே வந்து யார் அந்தக் கலி புருஷன் என்று கேட்டார். அந்த நம்பியாரை பார்த்ததும் அந்த சன்மார்க்கி என் கையைப் பிடித்து இப்போது கலிபுர்ஷனை பற்றி பேச வேண்டாம் என்று கண்களால் சைகை செய்தார். கலிப்புருஷனை பற்றி எல்லாம் வெளியே சொல்லாதீர்கள் அவன் உங்களை தம்சம் பண்ணிடுவான் என்று ஒரு குரல் கேட்டது. நான் கலிபுர்ஷனைப் பற்றி வெளியே சொல்ல வேண்டும் அப்போதுதான் எல்லாத்துக்கும் உண்மை புரியும் , இல்லையென்றால் அவன் எல்லா ஆவணத்தையும் குழப்பி விடுவான். இவ்வாறு தான் அந்த கடிதத்தில் இருந்த எழுத்துக்களை எல்லாம் அழித்துவிட்டு இருக்கின்றான் என்று சொன்னேன்.

16.02.2023

2021, 2022 ஆண்டுகளில் சாய்பாபா, ஏசுநாதர் போன்றவர்கள் என் கனவில் வந்துள்ளார்கள். இவர்கள் எல்லாம் பாபாஜிக்கு கீழ் இயங்கிக் கொண்டு உள்ளவர்கள் என்று அறியப்பெற்றேன். Inception படத்தில் வருவது போல் இவர்கள் என் கனவில் தோன்றி என்னைக் குழப்பி , மற்றும் சன்மார்க்க நெறியில் பயணிப்பவர்களை என் மூலமாக குழப்ப மற்றும் தடுக்க என்னை பயன்படுத்த முயற்சி செய்து உள்ளார்கள் என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் வள்ளலாரின் கருணையால் அறியப்பெற்றேன்.இந்த உண்மைகள் வள்ளலாரின் விருப்பம்போல் வரவேற்பு மாலை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

நீங்கள் உண்மையிலேயே வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க நெறியில் பயணித்தால் மட்டுமே கலிபுருஷன் மற்றும் அசுத்தமாயா சித்தர்கள் பற்றிய உண்மைகளை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும்.

நீங்கள் சுத்த சன்மார்க்க நெறியில் முழுமையாக பயணிக்கவில்லை என்றால் இந்த உண்மைகளை உங்கள் மனம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

இப்படிக்கு,

சிதம்பரம் இராமலிங்கத்தின் செல்லத்தம்பி அருண் பிரகாஷ் 😊

🙏 நன்றி 🙏

👆 அசுத்த மாயா சித்தர்களைப் பற்றி அறிய --> இங்கே கிளிக் செய்யவும் 👆

👆 கலிபுருஷன் மகா அவதார் பாபாஜி 🤘 தான் என்பதை சான்றுகளுடன் அறிய --> இங்கே கிளிக் செய்யவும் 👆

📧 contact : vallalardreams@gmail.com