May 7 2021 - வள்ளலாரின் இரண்டு படங்கள் தேவாலயத்தில் இருந்தன. ஒரு படத்தில் மீசை வைத்துக் கொண்டிருந்தார். படங்கள் தொங்க பட்டிருந்த இடங்கள் திருத்த வெளி சன்மார்க்க சங்கம் போலிருந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Feb 28 2021 - வள்ளலார் ரோட்டில் நின்று கொண்டிருந்தார் அவரை கட்டிப்பிடிக்க நான் ஓடிச் சென்றேன். நான் அருகில் சென்றதும் வயதானவர் போல் மாறி விட்டார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Feb 25 2021 - எனது நண்பர் ஒருவர் கனவில் தோன்றினார் அவரிடம் உனது தந்தை எங்கே சன்மார்க்க சங்கம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்டேன்.அது எங்கே கஸ்தூரி பாளையத்தில் உள்ளதா என்று கேட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Feb 9 2021 - எனது மாமா மற்றும் அவருடைய நண்பர் எங்களை வள்ளலாரின் விழாவிற்கு அழைத்தார்கள். நான் போக மறுத்து விட்டேன் ஏனென்றால் அவர்கள் தெய்வங்களையும் வழிபடுவார்கள். ஆனால் எனது அம்மா அந்த விழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். நான் அதற்கு வடலூர் செல்லலாம் என்று சொன்னேன். கடிகாரத்தைப் பார்த்தேன் மணி 4pm ஆகியிருந்தது, ஆதலால் வடலூர் செல்ல முடியாது . எனது அம்மாவையும் நான் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நாம் அந்த நிகழ்ச்சிக்கு போகலாம் என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Feb 8 2021 -நான் 4:30am மணிக்கு வள்ளலாரின் உருவப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப்படம் இளம் வயது வள்ளலார் ஆக மாறியது. அந்தப்படம் நான் வழிபாடு செய்ய எனது அறையில் வைத்திருந்த படம். பின்பு எனக்கு எப்போது பேரின்பம் கிடைக்கும் என்று கேட்டேன். பின்பு நான் காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு ஜோதி தரிசனம் காண பேருந்தில் பயணித்தேன் அப்போது மணி 12:00pm.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Jan 14 2021 - நான் ஒரு சன்மார்க்க சங்கத்திற்கு சென்றேன். அங்கே வயதானவர் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Jan 12 2021 - தினமும் வழிபட வைத்திருந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது . வள்ளலாரின் படம் கீழே படுத்தது போல் இருந்தது .அதை நான் எடுத்து வைத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Jan 1 2021 - நான் ஒரு கெட்ட சக்தியின் உருவத்தை பார்த்து பயந்து விட்டேன் .அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று சொல்ல ஆரம்பித்தேன் இது எனது வீட்டில் நடந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Dec 25 2020 -எவ்வுயிரும் தம்முயிர் என்ற திருவருட்பா வரி எனது கனவில் வந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Dec 19 2020 -நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். சன்மார்க்க சங்கத்திற்கு சென்று அதை ஒரு புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்று எண்ணினேன். திடீரென்று வள்ளலாரின் புகைப்படம் தெரிந்தது .அதை பார்த்தவுடன் அதன் அருகில் நான் சென்றேன். அதில் சன்மார்க்க சங்கம் செல்லும் வழி என்று இருந்தது அந்த வழியே நான் பின்தொடர்ந்தேன். அந்த வழியை பின்தொடர்ந்து சன்மார்க்க சங்கத்தை அடைந்தேன். அங்கு வள்ளலாரின் சிலை இருந்தது .அங்கே இருந்த வழிபாட்டு அறை வெறிச்சோடி இருந்தது. விநாயகரின் சிலையும் இருந்தது அதை நான் எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன் அந்த சங்கம் துளசி என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)Dec 30 2020 - ஒரு கெட்ட சக்திக்கும் விநாயகருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்த சக்தியை வைத்துக்கொண்டே விநாயகரால் அந்த கெட்ட சக்தியை சமாளிக்க முடியவில்லை. பின்பு தனது சக்தியை அதிகப்படுத்தினார். சக்தி பெரிதாக பெரிதாக விநாயகரும் பெரிதாகிக் கொண்டே இருந்தார் பின்பு வெடித்து விட்டார் .அந்த வெடிப்பில் இருந்து வள்ளலார் தோன்றினார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)17 oct 2020 - படப்பை சன்மார்க்க சங்கம் கனவில் வந்தது. அங்கே இருந்த மக்கள் அன்னதானத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்,
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)10 Oct 2020 - வள்ளலாரின் புகைப்படம் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்தது .அங்கே நிறைய மக்கள் பசியுடன் இருந்தார்கள்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)6 sep 2020- கனவில் நான் எனது அக்கா எனது அத்தை மற்றும் அவருடைய மகள் சித்திவளாகம் செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம். எனது அக்கா பேருந்தை விட்டுவிட்டார். பின்பு ஓடிச்சென்று பேருந்தில் ஏறினார்
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)31 Aug 2020 - வள்ளலாரின் புகைப்படம் ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு வீட்டில் இருந்தது. அதை நான் எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)29 Aug 2020 -அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற மகா மந்திரம் ஒரு போஸ்டரில் இருந்தது.அதை எனது நண்பர் தொலைபேசியில் மூலமாக புகைப்படம் எடுத்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)நான் ஒரு குகையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தேன் . வள்ளலார் என்மீது தண்ணீரை ஊற்றினார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)On July 2 2020 வள்ளலார் திருவருட்பா புத்தகத்தின் மீது அமர்ந்திருந்தார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)நான் எனது நண்பர் மற்றும் ஒரு பெண் சத்திய ஞான சபைக்கு சென்றோம்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)வள்ளலார் ஒரு வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா தெய்வங்களின் பெயரையும் சொன்னார். பின்பு நான் அருட்ஜோதி என்று சொன்னார்.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)